உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலை ஒருங்கிணைப்பாளர் இனி திட்ட பணிகளிலும் ஈடுபடலாம்

100 நாள் வேலை ஒருங்கிணைப்பாளர் இனி திட்ட பணிகளிலும் ஈடுபடலாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை, ஊராட்சி, திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்த பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை கமிஷனர் பொன்னையா வழங்கிய உத்தரவில், 'ஊராட்சி சார்ந்த பணிகள், பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிப்பு, மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், நோய் தடுப்பு பணி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் உதவுதல் போன்ற பணிகளில், மக்கள் நலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிஉள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை