உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ் புதிய தலைவராக சூரஜ் சலீம் தேர்வு

தி அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ் புதிய தலைவராக சூரஜ் சலீம் தேர்வு

சென்னை: 'தி அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ்' அமைப்பின், புதிய தலைவராக, சூரஜ் சலீம் தேர்வு செய்யப்பட்டார். 'தி அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ்' அமைப்பின், ஆண்டு பொதுக் கூட்டம் அக்., 24ம் தேதி நடந்தது. கூட்டத்தில், 2025 - -26ம் ஆண்டுக்கான புதிய தலைவராக, 'டிஜிட்டலி இன்ஸ்பையர்ட் மீடியா'வின் இணை நிறுவனர் சூரஜ் சலீம் தேர்வு செய்யப்பட்டார். இவர், இந்த அமைப்பின் 46வது தலைவராவார். துணை தலைவராக உமாநாத், செயலராக கவிதா ஸ்ரீனிவாசன் மற்றும் பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், 16 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து, சூரஜ் சலீம் கூறுகையில், ''தி அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ் எனும் பாரம்பரிய அமைப்புக்கு தலைமை தாங்குவது, எனக்கு கிடைத்த பெருமை. எங்கள் துறைகளை வலுப்படுத்துவது, படைப்பாற்றலை கொண்டாடுவது, கற்றல் மற்றும் ஒத்துழைப்புக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை என் நோக்கம்,'' என்றார். கவிதா ஸ்ரீனிவாசன் கூறுகையில், ''திறமையான குழு மற்றும் ஆர்வமுள்ள உறுப்பினர்களுடன், தொழில்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி