உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்

விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' இணைந்து வழங்கும், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற குழந்தைகளின் கல்விக் கண் திறக்கும் நிகழ்ச்சி, அக்டோபர், 2ல் சென்னையின் முக்கிய இடங்களில் நடக்கிறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது. விஜயதசமி நன்னாளில், நெல் மணியில் குழந்தைகளின் கையால் அகரம் எழுதி வித்யாரம்பம் செய்வது பாரம்பரியம். அந்நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின், 'அ'கரத்தை துவக்கி வைக்கின்றனர். முன்பதிவு சென்னை படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வட பழனி ஆண்டவர் கோவில், கேளம்பாக்கம் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் என, ஐந்து இடங்களில், அக்., 2ம் தேதி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், இரண்டரை முதல் மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம். இதற்கான முன் பதிவு தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடக்கிறது. முன்பதிவு செய்ய, இச்செய்தியில் உள்ள கியூ.ஆர்.குறியீடை 'ஸ்கேன்' செய்து, அதில் அருகில் உள்ள பகுதியை தேர்வு செய்து, குழந்தை குறித்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும். புகைப்படம் இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள 'டி-ஷர்ட்' உடன், 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங் களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் 'சேனல் பார்ட்னர்' தமிழ் ஜனம் தொலைக்காட்சி. வடபழனி ஆண்டவர் கோவில் மற்றும் தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் முன்பதிவு நிறைவடைந்து விட்டது. மற்ற பகுதிகளில் முன்பதிவு நடந்து வருகிறது. பிரபலங்கள் பங்கேற்பு நிகழ்ச்சியில், டாக்டர்கள் செங்கோட்டுவேலு, ஜெயராஜா, விஜயகுமார், ஏ.வி.ஸ்ரீனிவாசன், விஞ்ஞானி டில்லி பாபு, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, ஐ.பி.எஸ்., அதிகாரி டி.எஸ்.அன்பு, தகவல் உரிமை கமிஷனர் திருமலை மூர்த்தி, கணிதவியலாளர் சடகோபன் ராஜேஷ், பவன்ஸ் பள்ளி முதல்வர் சுப்ரமணியம், நடேசன் பள்ளி தாளாளர் ராமசுப்ரமணியன். சங்கரா பள்ளி தாளாளர் சங்கர், மருத்துவர் தீபா ஹரிஹரன், பட்டிமன்ற பேச்சாளர்கள் கு.ஞானசம்பந்தன், பாரதி பாஸ்கர், சாந்தாமணி... ஆன்மிக பேச்சாளர் நாகை முகுந்தன், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், திருப்பூர் கிருஷ்ணன், ஆதலையூர் சூரியகுமார், பிரபுசங்கர், முன்னாள் டி.ஜி.பி., - கே.வி.கே.ஸ்ரீராம், துணை கமிஷனர் ஹரிகரன், தர்ம பிரபோதனா அறக்கட்டளை அறங்காவலர் சீதாராமன் கிரி, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், ஜோதிடர்கள் ஹரிகேசநல்லுார் வெங்கட்ராமன், பாரதி ஸ்ரீதர், ஆன்மிக பாடகர் வீரமணி ராஜு, வில்லிசை கலைஞர் பாரதி திருமகன், பாடல் ஆசிரியர் விவேகா, பாடகர்கள் தேவன், ஸ்ரீவர்த்தினி, திரைப்படக் கலைஞர்கள் சுஜிதா, உமா ஐயர், பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !