உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படகு, பம்புசெட், டிராக்டர் எல்லாமே ரெடி; மழை வருவது மட்டும் தான் பாக்கி!

படகு, பம்புசெட், டிராக்டர் எல்லாமே ரெடி; மழை வருவது மட்டும் தான் பாக்கி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வடகிழக்கு மழையை சமாளிக்க டிராக்டர்கள், பம்புகள் தயாராக உள்ளது என புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சென்னை மாநகராட்சி பகிர்ந்துள்ளது. தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழைக்கு முன்னதாகவே, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நாளை கனமழைக்கான ஆரஞ்ச் ஆலர்ட் சென்னைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (அக்.,13) வடகிழக்கு மழையை சமாளிக்க டிராக்டர்கள், பம்புகள் தயாராக உள்ளது என்றும், நிவாரண முகாம்களில் ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருப்பதாகவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

133 பம்புகள் தயார்

'கனமழைக்கான 6வது மண்டலத்தில் மட்டும், தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்கள் கொண்ட 10 டிராக்டர்கள், 100 குதிரைத்திறன் கொண்ட 133 பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 400 டிராக்டர்கள் சென்னைக்கு வருகின்றன' என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழையை சமாளிக்க, 36 படகுகள், 913 மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

VASUDEVAN
அக் 14, 2024 16:18

4000 கோடி செலவு போஸ்ட் ஆபீஸ் தெரு பர்ரிஸ் தினம் நாறிக்கொண்டு இருக்கிறதரு


lana
அக் 14, 2024 10:56

covai தீயணைப்பு க்கு 25 லட்சத்து க்கு tea வாங்கினது போல இங்கும் ஒரு 25 கோடி க்கு tea வாங்க முடியுமா ஆபிஸர். மண் மூட்டை காசு கொடுத்து வாங்க வேண்டாம். நம்ம Durai மற்றும் உள்ள 200 ரூபாய் உ.பி களை பயன் படுத்த வேண்டும்


nb
அக் 14, 2024 07:04

அப்ப 4000 கோடி வடிகால்???


Kasimani Baskaran
அக் 14, 2024 06:12

வரலாறு காணாத மழை என்று விடியல் அரசு தப்பித்து விடும். ஆகவே பொதுமக்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.


J.V. Iyer
அக் 14, 2024 04:55

படகுப்போட்டியும் ஒன்று அறிமுகப்படுத்தலாமே?


Sathyanarayanan Sathyasekaren
அக் 14, 2024 04:26

இங்கே புலம்பி என்ன உபயோகம், சென்னை மக்கள் மறுபடியும், குவார்ட்டரும், 2000 ரூபாயும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மறுபடியும் திருட்டு திராவிட கூட்டத்திற்கு தான் வோட்டை போடுவார்கள். புலம்பி என்ன பயன்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 13, 2024 22:21

பதினாறாயிரம் கோடி ரூபாயில் சென்னையில் மழை நீர் வடிகால் திட்டம் ஆரம்பிச்சு அது தொண்ணூறு சதவீதம் முடிந்ததாக விளம்பரம் செஞ்சு, இப்போ பம்ப், டிராக்டர் படகு படகு ஓட்டுனர் நீந்துனர், நீந்துனருக்கு துணைவர் இப்படி இத்யாதிகள் பட்டியல் கொடுக்கிறீங்களே, அப்போ நீங்க முடிச்சதாக சொன்ன அந்த மழை நீர் வடிகால் திட்டத்து மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? இல்லே அந்த திட்டமே உடன்பிறப்புகள் சாப்பிடுவதற்காக போடப்பட்ட திட்டமா?


Murugesan
அக் 13, 2024 22:03

கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க .நிரந்தர தீர்வு செய்ய வக்கற்ற அயோக்கியர்கள் , கோடி கோடியாக கொள்ளையடித்த நயவஞ்சக கொள்ளைக்காரர்கள்.பம்பு செட் ரெடியாமாம், இத்தனை வருடம் என்னத்த கிழிக்கறாங்க


Devanand Louis
அக் 13, 2024 21:46

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.


Devanand Louis
அக் 13, 2024 21:43

மதுரை திருமங்கலம் ரயில்வே பாலம் வேலைகள் நடைபெறுகிறது , மாற்று பாதை சரியான விதிகளின் மற்றும் உரிய கட்டமைப்புகள் பின்பற்றாமல் -நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மாற்றுப்பாதை வெறும் மண்னபாதைபோட்டு மேடுபள்ளங்கள் உள்ளன , கனரக வாகனங்கள் செல்லும் இந்தப்பாதையில் பொதுமக்களின் பயம் அதிகமுள்ளது , இப்பொழுது மழைகாலமென்பதால் ஆங்காங்கே மழைதண்ணீர்தேங்கி பாதுகாப்பற்ற சூழலுள்ளது - இதனால் நோக்கல்ஸ்விபத்துகள் மற்றும் மரணங்களுக்கு நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்தான் பெறுப்பேற்கவேண்டும் .தினமலரின் உதவிகள் வேண்டும்


முக்கிய வீடியோ