உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதையடுத்து, இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரம் பணிமனையை சேர்ந்த டிஎன்.74 என்.2120 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ், தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே நாலுமாவடி கிறிஸ்துவ சபையில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு இன்று(நவ.,09) அதிகாலை, 4:50 மணிக்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தது. பின்னர் அதிகாலை, 5:00 மணியளவில் நாகர்கோவில் புறப்பட்டது. அந்த பஸ்சில் வள்ளியூரை சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பயணித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0tqltqpe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மேல் சட்டை அணியவில்லை. ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். 'பஸ் வள்ளியூருக்குள் செல்லாது; பைபாஸில் மட்டுமே நிற்கும்' என, கண்டக்டர் அந்தோணி அடிமை தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், 'இந்த பஸ் வழக்கமாக வள்ளியூருக்குள் செல்லும். ஏன் இன்று பைபாசில் இறங்க சொல்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கண்டக்டர், 'பஸ்சில் நாலுமாவடி கிறிஸ்துவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். உன் ஒருத்தனுக்காக மட்டும் வள்ளியூருக்குள் வர முடியாது' என, அவதுாறாக பேசினார்.சுப்பிரமணியன் இறங்க மறுத்ததால், பஸ் வள்ளியூருக்குள் சென்றது. அங்கு அவர் குடும்பத்தினர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வள்ளியூர் பொதுமக்களும் பஸ் முன் கூடி போராட்டத்தில் இணைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சுப்பிரமணியனிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், பஸ் நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.சுப்பிரமணியன் கூறுகையில், ''பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் கண்டக்டருக்கு ஆதரவாக மத ரீதியாக நடந்து கொண்டனர். இந்த பஸ் நாலுமாவடியில் இருந்து அவர்களுக்காக மட்டும் ஒப்பந்தம் பேசி இயக்கப்படவில்லை. அனைவரும் டிக்கெட் எடுத்து தான் பயணித்தோம். கண்டக்டரும் அவதுாறாக பேசினார். இதை வீடியோவாக பதிவுசெய்துள்ளேன்,'' என்றார்.வள்ளியூர், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இது சபாநாயகர் அப்பாவு தொகுதி என்றாலும், அரசு பஸ்கள் வள்ளியூருக்குள் செல்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றன என்பதே பொதுமக்கள் குற்றச்சாட்டு. திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே கண்டக்டர் இல்லாமல் இயங்கும், 'ஒன் டூ ஒன்' பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூருக்குள் செல்வது கட்டாயம். அதை பின்பற்றாமல் சிலர் பயணியரிடம் கடுமையாக நடந்து கொள்வது தொடர்கிறது.மத ரீதியாகவும், அவதுாறாகவும் நடந்து கொண்ட கண்டக்டர் அந்தோணி அடிமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியூர் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை

பயணியிடம் அவதூறாக பேசிய நாகர்கோவில் அரசு பஸ் கண்டக்டர் அந்தோணி அடிமையை சஸ்பெண்ட் செய்து, போக்குவரத்து பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 187 )

skv srinivasankrishnaveni
டிச 03, 2025 11:39

இதுலே அழகு என்னண்ணா எல்லோரும் மதமாறிய வாங்களேதான் எவனும் ஒரிஜினல் கிடையாது முஸ்லீம்களாக மாறினால் தீவிரவாதியாக்கி நம்மளை அழிக்குறாங்க கிறிஸ்துவனானால் இந்துமதம் லெந்து மாறியவா தான் இதுலே BEAUTY என்னான்னா ஒருவருக்கும் பைபிள குர்ரான் தெரியாது


Mala S
டிச 08, 2025 10:02

RIGHTLY SAID


Gurumurthy Kalyanaraman
நவ 27, 2025 18:46

மேல்கொண்டு விசாரணை செய்து அந்த கண்டக்டரய் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


Gururaj Kamaraj
நவ 25, 2025 16:39

ha ஹா


Priyan Vadanad
நவ 18, 2025 15:26

தியேட்டரில் ஆள் இல்லாவிட்டாலும் இந்த படம் வெள்ளிவிழா கண்டதும் போலிருக்கே.


KRISHNAN R
நவ 17, 2025 18:09

புதிய நடிகர் கட்சி... வந்தால் நிலைமை என்ன என்று தெரியவில்லை பாருங்க


Raajanna
நவ 16, 2025 23:58

கலியின் அடையாளமே.


N Annamalai
நவ 16, 2025 09:11

மதம் மாறியபின் அவர்கள் சலுகைகள் பறிக்கப் பட வேண்டும் .இரண்டு பெயர் வைத்துக் கொண்டு சுத்தக் கூடாது .


Nagaraj.siddarth Nagaraj.siddarth
நவ 16, 2025 17:46

குட்


Mennon Kasirajam
நவ 14, 2025 21:19

விக்கிரக வழிபாடு செய்பவர்களை நாய்,போய்,சாத்தான் ,அஞ்ஞானிகள் ,கொலைபாதர்கள் ஏன்றும் பெண்களை பைபிளில் சூத்திரதாரிகள் என்றும் மிக அநாகரீகமாக திட்டுகிறார். இயேசுவின் பக்தர்களும் அவ்வழியே.


Modisha
நவ 13, 2025 07:17

Tamil நாட்டில் ஹிந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள் , ஆகவே கிறிஸ்துவர்கள் வெளியேறுங்க, இது எப்படி இருக்கு .


சிவதாணு
நவ 10, 2025 19:11

இந்திய நாட்டில் இந்துக்களுக்கு இடமில்லை என்றாகிவிடும் மக்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை