உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய அரசு நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மத்திய அரசு தன் நிதியை தாமதமின்றி சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்'' என ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மருத்துவம், உழவர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nkkz3txi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 55.12 லட்சம் பேர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். முதியோர், பழங்குடிகள் இடம்பெற்று சுய உதவிக்குழுக்கள் மூலம் 1.57 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.

வளர்ச்சி விகிதம்

மதிய உணவு திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு உள்ளது. சிறு விவசாயிகளுக்கு 55% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45% மானியமும் வழங்கப்படும். விவசாயிகள் நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளது.

நிதி வழங்கணும்

நமது அரசின் எல்லா திட்டங்களும் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டு என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்குத்தொகையை எந்தவித காலதாமதமின்றி விடுவிக்கிறோம்; அதேபோல மத்திய அரசு தன் நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சிலை திறப்பு

முன்னதாக, சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் திருவுருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கிடையே அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ574 கோடியில் புதிய நிறுவனம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Muthu
செப் 25, 2025 18:00

முடியாது .......


அருண், சென்னை
செப் 20, 2025 06:15

வாயதோரந்தாலே, மத்திய அரசிடம் கேட்கும் ஒரே கேள்வி "நிதி"...மக்களின் நன்மைக்காக இந்த 4.5 வருஷத்தில் என்ன கேட்டுள்ளார்? எப்பவுமே, "சந்தைக்கு போகணும் காசு கொடு"ங்கிற மாதிரிதான்... வேறு எதுவும் தெரியாது... மக்களிடம் பல வரி கொள்ளை, மத்திய அரசிடம் கொள்ளை....கடவுள்தான் காப்பாத்தனும் தமிழ்நாட்டை.. வெறித்தனமா சுற்றி, சுற்றி திமுக தலைவன் குடும்பம் முதல் தொண்டன் வரை எல்லோரும் மக்களின் உழைப்பில் வரும் வருமானைத்தை சுரண்டுகிறார்கள்..


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2025 22:03

தாமதமின்றி செய்யுங்க , என்னோட தலை அரிக்குது , சீக்கிரம் ஒருரவுண்டு போகணும்


N S
செப் 19, 2025 20:53

தாமதமின்றி ஒதுக்கினால் தான் விரைவாக முழுங்க முடியும். இறங்கிய உரத்தை விநியோகிக்க முடியலை, நிதி வேண்டுமாம். எல்ல நிதியும், அன்பு, உதயம், கருணை என குடும்பத்திலே இருக்கே


சிவகுமார்
செப் 19, 2025 20:51

சட்ட மன்ற தேர்தலுக்கு எடுத்து வைக்க வேண்டுமே, நிதி இல்லை என்றால் ஓட்டுக்கு துட்டு எப்படி கொடுப்பது?


Thravisham
செப் 20, 2025 06:50

சோற்றாலும் காசாலும் மக்களை அடிக்க சாராயம் மூலம் வந்த கள்ள நிதியை தொகுதிகளில் இறக்கியாச்சு. இப்ப மத்திய அரசை கேக்குற நிதி எங் குடும்ப நிதிகளுக்கு.


panneer selvam
செப் 19, 2025 20:27

Fund allocation is based on finance commission agreement with Tamilnadu government . Regarding project oriented funds allocation , it depends on project progress . So no need to play politics . Project allocation is the discretion of Central government . If you quarrel with Central even on petty issue , the loser will be the state .


தாமரை மலர்கிறது
செப் 19, 2025 19:04

பத்து பைசா கிடையாது. ரைடு தான் தமிழகத்திற்கு இப்போதைய தேவை.


G Mahalingam
செப் 19, 2025 18:34

தாமதமின்றி நிதி ஒதுக்கினால் அதில் பாதி கோபாலபுரத்துக்கு ஒதுக்குவோம்ல.


திகழ்ஓவியன்
செப் 19, 2025 20:18

அப்படியா ஒத்த வோட்டு தேறாது , BINARY லெவல் தான் உங்கள் வோட்டு அதாவது நோட்டா வுக்கு கீழே


C.SRIRAM
செப் 19, 2025 18:12

அப்போது தான் தாமதமின்றி நாங்கள் கொள்ளை அடிக்க முடியும்


Rajasekar Jayaraman
செப் 19, 2025 17:51

தேர்தல் செலவுக்கு நீங்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணம் போதவில்லையா மேலும் கொள்ளை அடிக்க வேண்டுமா.


சமீபத்திய செய்தி