வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோடிக்கணக்க தேர்தல் பிரமாண பத்திரம் பாஜக தொழில் அதிபர்கள் கிட்ட வாங்கிடுச்சு இன்னும் வேணுமா
திருப்பூர் : ''அமெரிக்க வரி விதிப்பு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது,'' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருப்பூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் தொழில் முதலீடு ஈர்க்க வெளிநாடு செல்கிறார். துபாய் சென்ற போது 6,000 கோடி; அமெரிக்கா சென்றபோது 7,000 கோடி, ஸ்பெயின் சென்ற போது பல்லாயிரம் கோடி ரூபாய் என முதலீடு ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த முதலீடும் இங்கு துவங்கப்படவில்லை. அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று வந்த முதல்வர் ஸ்டாலின், ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கைகளால் பாதிப்பு என்று கூறும் ஸ்டாலின், எந்த அடிப்படையில் பாதிப்பு என்று குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் என்ன மாற்றம் தேவை என்று நடவடிக்கை எடுக்க முடியும். அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி என்பது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை இல்லை; சர்வதேச அளவிலான பிரச்னை. திருப்பூர் தொழில் துறையினர் இரு நாட்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். தொழிலாளர் வேலை இழப்பு ஏற்படாத வகையில், மத்திய அரசு பாதுகாக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டின் மீது வேறு நாடு போர் தொடுத்தால், நம் அரசுக்கு நாம் துணை நிற்க வேண்டும். அது போல் தான், இந்த அமெரிக்க வரி விதிப்பு பிரச்னையும். இதை எதிர்கொள்ள, மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினால், அவர்கள் எண்ணம் எப்படி என்பதை உணர வேண்டும். தொழில் துறைக்கு நன்மை செய்ய நினைத்தால், மாநில அரசு மின் கட்டண சலுகை தரலாம்; ஆலைகளுக்கு சொத்து வரியை ரத்து செய்யலாம். அதை விட்டு விட்டு மாநில அரசு, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. மக்களிடம் பெற்ற மனுக்களை குப்பையிலும், குளத்திலும் வீசுவது தான் திராவிட மாடல் ஆட்சி. தேர்தலுக்கு எட்டு மாதம் உள்ளது. நிறைய கட்சிகள் அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணியில் இணையும். இவ்வாறு அவர் கூறினார்.
கோடிக்கணக்க தேர்தல் பிரமாண பத்திரம் பாஜக தொழில் அதிபர்கள் கிட்ட வாங்கிடுச்சு இன்னும் வேணுமா