உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு படுதோல்வி; அன்புமணி விமர்சனம்

வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு படுதோல்வி; அன்புமணி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ., மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மழை என்றும் கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ., மாதம்பூண்டியில் 31 செ.மீ., சேலம் ஏற்காட்டில் 24 செ.மீ., மழை கொட்டித்தீர்த்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஓடிய மழை நீர் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை அடித்துச் சென்றுள்ளன என்பதிலிருந்தே அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும். திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் சரபங்கா ஆற்றிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கடலூர் வரை தென்பெண்ணை ஆற்றிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.வரலாறு காணாத மழை பெய்திருப்பது உண்மை தான் என்றாலும், அவற்றை சமாளிக்கும் அளவுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் கட்டமைப்புகளையும் மீறி, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளும், மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான். தூர் வாரும் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியவில்லை. பல இடங்களில் கால்வாய்களில் ஓட வேண்டிய மழை நீர் சாலைகளிலும், தெருக்களிலும் ஓடியது தான் அதிக பாதிப்புகளுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அலட்சியத்தாலும், திறனற்ற செயல்பாடுகளாலும் பேரழிவை உண்டாக்கியுள்ள தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதிலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் படுதோல்வி அடைந்து விட்டது. திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டதால் சேதமடைந்த வீடுகளுக்குள் 7 பேர் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், 18 மணி நேரமாகியும் அவர்கள் மிட்கப்படவில்லை. பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது குறித்த கவலை எதுவும் முதலமைச்சருக்கு இல்லை. வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதலாக மீட்புக் குழுக்களை அந்த பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 7 பேரையும் உயிருடன் மீட்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MADHAVAN
டிச 02, 2024 18:36

உங்களது கருத்துக்களை யாரும் நம்ப தயாரில்லை, ஸ்டேன்டு இல்லாத சைக்கிள் போல 2006-திமுக -2011 - அதிமுக, 2014 -திமுக, 2014- மநகூ , 2016 - தனியா , 2019 - அதிமுக, 2021-அதிமுக, 2024 - பிஜேபி இப்படி, உங்களை நம்பிய மக்களை ஏமாற்றியது நீங்கள், உங்கள் தந்தை, மற்றும் இப்போ உங்க மனைவியும் அரசியலில், வாரிசு அரசியல் என்பது நீங்கள்தான்,


Indian
டிச 02, 2024 14:05

இந்த விமர்சனத்தை யாரும் ரசிக்க மாட்டார்கள்


rasaa
டிச 02, 2024 13:41

அன்புமணிக்கு வேறு வேலை இல்லை. ஏதாவது விமர்சனம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்.......தலீவர் பதில்


அப்பாவி
டிச 02, 2024 12:48

இந்த கும்பலால மக்களுக்கு தம்பிடி பிரயோஜனம் கிடையாது. வாய் மட்டும் நீளும்.


Raj Kamal
டிச 02, 2024 12:35

இத தவிர, நீ வேற ஏதாவது சொன்னால் தான் ஆச்சர்யம்.


Tamil Inban
டிச 02, 2024 12:23

நீயும் உங்க அப்பாவும் வெள்ளத்தில போக்கையே, அட பாவமே


Dhurvesh
டிச 02, 2024 12:18

சரி மேங்கோ மேன் ஏன் களத்தில் காலத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டியது தானே பொட்டி கேட்டு வாங்க தெரியுது இல்லை யா, இறங்கு சேறு தண்ணீரில் இறங்கி உதய நிதி போல வேலை சேயா பாரு பேச்சை குறை


saiprakash
டிச 02, 2024 12:17

சின்ன மாங்கா, நல்லாத்தான் பண்ணிட்டு இருக்காங்க, நீங்க வாயை மூடுங்க ,நீங்க என்னத்த கிழிச்சீங்க


சம்பா
டிச 02, 2024 12:14

ஓசி பஸ் ஆயிரம் ரூபா ஓட்டுக்கு காசு போதும்


Ramesh Sargam
டிச 02, 2024 12:06

படுதோல்வி, உண்மைதான். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவார்கள், அந்த நேரத்தில் மக்களுக்கு கொடுக்கவேண்டிய இலவசங்களை அரசு பணத்திலிருந்து எடுத்து செலவழித்து. முதலில் மக்கள் திருந்தவேண்டும். இலவசங்களுக்கு விலைபோகக்கூடாது.


Dhurvesh
டிச 02, 2024 13:46

எப்படி மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி போல வா பாம்பின் கால் பாம்பு அறியும் ஆனால் பிஜேபி பப்பு இங்கு வேகாதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை