உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்

 எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், இடதுசாரிகள் துடைத்தெறியப்பட்டது போல, ஒரு கருத்தை கட்டமைக்கின்றனர். அது உண்மையில்லை. எத்தனை கட்சிகள் வந்தாலும், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி தான் வெல்லும். கூட்டணியின் பலம் மட்டும் அதற்கு காரணம் அல்ல. தமிழக அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்களும் காரணம். தமிழகத்தில் ஏதேதோ செய்து, காலுான்ற பார்க்கிறது பா.ஜ., அக்கட்சி என்ன செய்தாலும், அது தமிழகத்தில் எடுபடாது; தேர்தலிலும் தோற்கடிக்கப்படும். தி.மு.க., தீய சக்தி அல்ல; ஜனநாயக சக்தி. நடிகர் விஜய் அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கிறார். அவர் படிக்க வேண்டிய பாடங்களும், பெற வேண்டிய அனுபவங்களும் நிறைய இருக்கின்றன. நாங்கள் கூடுதல் இடங்களை கேட்டாலும், தமிழக முதல்வர் அதை விரோதமாக எடுத்துக் கொள்ள மாட்டார். எங்களை உள்ளும், புறமும் அறிந்தவர் முதல்வர். - வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை