உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை

முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காமல், முதல்வர் ஸ்டாலின் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு, தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாம்பன் பாலம் சிறப்பாக திறக்கப்பட்டுள்ளது. ரு.8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அதற்கு முதல்வர் சொல்லியிருக்கும் காரணம் கூட ஏற்புடையது கிடையாது. பிப்., மாதம் முதலே பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு நாள் குறிக்க மாநில அரசுடன் பேசியது நமக்கு தெரியும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xrxoljcm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமக்காக ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை கொடுப்பதற்காக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படியிருக்கும் போது, பிரதமரை வரவேற்க வேண்டியது, மாநிலத்தின் நம்முடைய பிரதிநிதியாக இருக்கும் முதல்வரின் தலையாய கடமை. ஆனால், முதல்வர் அரசியல் செய்து, ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், ஊட்டிக்கு போயிட்டார். முதல்வருக்கு வெயில் தாங்காது போல. இதனால், வண்டிய ஊட்டிக்கு விடுடா என்று சொல்லி, ஊட்டி குளிரில் இதமா, பதமா இருக்க அங்க போய் விட்டார். இதனை பா.ஜ., கடுமையாக கண்டிக்கிறது. முதல்வர் கடமையை செய்ய தவறிவிட்டார். பிரதமருக்கு அந்த மரியாதையை கொடுத்திருக்க வேண்டும். பிரதமரை அவர் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு, தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுகிறார். தொகுதி மறுசீராய்வு பற்றி பிரதமர் பேச வேண்டும் கூறுகிறார். முதல்வர் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை மக்கள் முழுமையாக உணர்ந்து விட்டார்கள். தொகுதி சீரமைப்பு வரும் போது, அப்போது தெரியும், எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது என்று. இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் முதல்வர் ஒளிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் பேசும் போது, முக்கிய விஷயங்களைப் பற்றி பேசினார். நீங்கள் எல்லாம் தாய்தமிழை பற்றி பேசுகிறீர்கள். மக்களின் வரிப்பணத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், எனக்கு அனுப்பக் கூடிய கடிதங்களில் கையெழுத்தையே ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். அப்பறம் என்ன தமிழ் வளர்ச்சியை பற்றி பேசுறீங்க. இங்குள்ள மருத்துவப் படிப்பை ஏன் தமிழில் கொடுக்க மாட்டிறீங்க. 10 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட, பா.ஜ., கூட்டணி ஆட்சியில் தான் தமிழகத்திற்கு ரயில்வே துறையில் 7 மடங்கு நிதி கொடுத்துள்ளோம். அப்படியிருந்தும் சில அரசியல்வாதிகள் அழுவதை மட்டுமே முழுநேர வேலையாக வைத்துள்ளார்கள் என்பதை பிரதமர் சுட்டி காட்டியுள்ளார். மாநிலத்தின் மீது அக்கறை இருந்தால், முதல்வர் இங்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. ஆனால், அடுத்த முறை இந்த தவறு செய்யாமல், தமிழகத்தின் நலனுக்கு முதல்வரும் துணை இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன். இது அரசு நிகழ்ச்சி என்பதால் மேடையில் அமரவில்லை. மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் எங்களுக்கு வேலை இல்லை. இதனால், தான் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 'வெர்ட்டிக்கல் லிப்ட்' பாம்பன் பாலத்தில் தான் உள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

K.Ramakrishnan
ஏப் 07, 2025 23:49

எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மோடி தமிழ்நாட்டுக்கும் சேர்த்துத் தானே பிரதமர். தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தருவதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவில்லை. கவர்னர் என்ற போர்வையில் ஒரு சங்கியை கவர்னராக உட்கார வைத்து தமிழ்நாடு அரசுக்கு இணையாக ஒருபோட்டி அரசு நடத்த வைத்து நிர்வாகத்தை முடக்குகிறார். இப்படி பல... எனவே பிரதமரை முதல்வர் வரவேற்காதது ஒன்றும் இமாலய குற்றம் அல்ல. மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை.


ram
ஏப் 07, 2025 18:23

முதல்வராவே யாரும் மதிப்பதில்லே.. அப்புறம் எப்படி வரனும்னு நினைக்கிரீங்க..


Murthy
ஏப் 07, 2025 12:37

எத்துணை ரைடு .....1000 கோடி ஊழல் என்றெல்லாம் சொன்னீர்கள் . .....யாரையாவது கைது செய்து உளீர்களா ??.....கூட்டு கலவடிகள்தானே இருவரும் . ....


Madras Madra
ஏப் 07, 2025 11:22

ஸ்ரீ ராம நவமின்னு பதுங்கிட்டாரு முதல்வர் இல்லன்னா ஜெய் ஸ்ரீ ராம் னு பிரதமர் மேடையில வெச்சி சொல்லும்போது கூட்டமும் சொல்லும் விபூதின்னா குங்குமம்னா அழிச்சிடலாம் கோஷம்னா ஒன்னும் பண்ண முடியாதுல்ல அதான்


Ray
ஏப் 07, 2025 10:29

The vertical lift span of the new பாம்பன் Rail Bridge, inaugurated by Prime Minister Narendra Modi on Sunday April 6, 2025, caused concern among senior railway officials when the lifted centre span became stuck midway as it was being lowered. However, a senior railway official dismissed the issue as a minor teething problem, which was eventually resolved.


Ray
ஏப் 07, 2025 10:24

2010 ல் நம் நாட்டு பட்ஜெட் 11.8 லக்ஷம் கோடி இந்த 2015 ல் 50 லக்ஷம் கோடிக்குமேல். பட்ஜெட்டே ஐந்து மடங்கு ஆகியிருக்கு அதுக்கேற்ப தமிழ்நாட்டுக்கு நிதி வரணும். ஒன்னும் செய்யாமையே, செய்யறதுக்கு சுத்தமா மனமில்லாமல் அவ்ளோ செஞ்சோம்னு கதையளக்கறது ஓட்டாக மாறாது முன்கை நீண்டாதானே முழங்கை நீளும்கறதை தெரிஞ்சுக்கணும். தமிழ்ல படிச்சிருந்தாத்தானே அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். அந்த நிதி மந்திரிக்கு வந்த வாழ்வு என்னடான்னா எதோ யானைமேல் போறவன்கிட்டே சுண்ணாம்பு கேட்ட கதையா இந்தான்னு கிள்ளி எடுத்து விரலை நீட்டறாங்க. சென்னை மெட்ரோவுக்கு பணம் தரலேன்னா திட்டத்தையே கையில எடுத்துக்கிட்டது என்ன காரணம்னு குழந்தைக்குக்கூட தெரியும். டில்லி மெட்ரோதான் இனிமே இயக்குமாம் பராமறிக்குமாம். டெண்டர் எல்லாம் டில்லியில் முடிக்கிறது என்ன காரணம்னு மக்களுக்கு தெரியாதா? கொள்ளையடிக்க குடுமிப்பிடி சண்டை.


Madras Madra
ஏப் 07, 2025 11:26

பணம் தரலன்னா என்னங்க உடனே சட்ட சபைல ஒரு தீர்மானம் போட்டு அனுப்புங்க எல்லா பிரச்சினை க்கும் இதானே திராவிட தீர்வு


Barakat Ali
ஏப் 07, 2025 09:47

எடுத்ததுக்கெல்லாம் போலி வாக்குறுதிகள், பசப்பு வார்த்தைகள், மதியீன மாண்புமிகுக்களை அமைச்சரவையில் வைத்திருப்பது, உளறல் பேச்சுக்கள், கட்சியில் இருக்கும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி இப்படி எத்தனை எத்தனையோ .... .


Indian
ஏப் 07, 2025 08:54

உளறல் மன்னன் ..


RATNAM SRINIVASAN
ஏப் 07, 2025 10:05

நீங்கள் என்ன பெரிய புத்திசாலி என்ற நெனப்பா


Sampath Kumar
ஏப் 07, 2025 08:19

முதல நீங்க யாரு உங்க பதவி என்ன


pmsamy
ஏப் 07, 2025 06:41

ஒன்றிய அரசுக்கு அவ்வளவு தான் மரியாதை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை