| ADDED : ஜூலை 25, 2025 02:16 AM
கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என தற்போது கூறும் பழனிசாமி, அ.தி.மு.க.,வின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தார்? முதல்வர் குறித்து ஒருமையில் பேசுவது, எதிர்க்கட்சித் தலைவரின் தரத்தை காட்டுகிறது. அடிமை இயக்கத்தை யார் நடத்துகின்றனர் என அவர்களுக்கே புரியும். பழனிசாமியின் சுற்றுப்பயணம் புளிச்ச பயணம்; தீர்வு இல்லாத பயணம். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சுற்றுப்பயணம் என்ற பெயரில் மாற்றி மாற்றி பேசி வருகிறார். ஏற்கனவே நடந்த அத்தனை தேர்தல்களிலும் பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் தோல்வியை பரிசாக தந்தவர் முதல்வர் ஸ்டாலின்; வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் தோல்வியையே பரிசளிப்பார். - சேகர்பாபு, அறநிலையதுறை அமைச்சர், தி.மு.க.,