உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ரூ.800க்கு விற்பனை; முதல்வர் மருந்தகம் அபாரம்

தினமும் ரூ.800க்கு விற்பனை; முதல்வர் மருந்தகம் அபாரம்

சென்னை:முதல்வர் மருந்தகத்தில் தினமும் சராசரியாக, 800 ரூபாய்க்கு மருந்து விற்பனை நடப்பதாக, கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுதும் உள்ள, 1,000 முதல்வர் மருந்தகங்களில் உயிர் காக்கும் ஜெனரிக் மருந்துகள், சந்தை விலையை காட்டிலும், 70 - 90 சதவீதம் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. மருந்தகங்கள் துவங்கிய பிப்ரவரியில் தினமும் சராசரியாக, 300 ரூபாய்க்கு மருந்து விற்பனை இருந்த நிலையில், தற்போது, தினமும் சராசரியாக, 800 ரூபாய்க்கு மேல் விற்பனை நடக்கிறது. இதுவரை, 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெனரிக் மருந்துகளும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பிராண்டட் மருந்துகளும், முதல்வர் மருந்தகங்கள் வாயிலாக மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகம் நடத்தும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்க மருந்தாளுநர்களுக்கு லாபத்தில் பங்கு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் பணிபுரிவோருக்கு, 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே, பாக்கெட் உணவு வகைகள் விற்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Prabakaran M
ஜூன் 22, 2025 15:46

முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் சரியான திட்டமிடல் அல்லாமல் செயல்படுத்திய திட்டம் என்பதால் தான் இந்த நிலையில் உள்ளது. மக்கள் மருந்தகம் திட்டமானது சரியான முறையில் இயங்கி வருகிறது. அங்கு அனைத்து வகையான மருந்துகளும் இருப்பு உள்ளது. இல்லாத மருந்துகள் அந்த மருந்தக உரிமையாளர் கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம் என்று நடைமுறை உள்ளது அது மட்டும் அல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் வாசனை திரவியம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யலாம் என்று உள்ளது. ஆனால் இதில் எதுவும் முதல்வர் மருந்தகத்தில் இல்லை.அந்த அந்த மருந்தகத்தில் தேவைபடும் மருந்துகள் அவர்கள் விற்பனை செய்தால் விற்பனை அதிகரிக்கும். அரசு சார்பில் ஜெனரிக் மருந்துகள் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆனால் அரசு இதை கவனத்தில் கொள்ளுமா என்பது கேள்வி குறியாக உள்ளது....


Yasararafath
ஜூன் 21, 2025 22:02

இதுவே ஒரு ஊழல்


Jawaharlu Naidu
ஜூன் 21, 2025 16:07

லூமிகன் கண் மருந்து 150 ரூபாய் மற்ற கடைகளைவிட இங்கு குறைவாக தருகிறார்கள், இது மத்திய அரசு மருந்து கடையில் இல்லை, மக்கள் தான் உபயோக படுத்தி லாபம் கொள்ள முயற்சிக்க வேண்டும். நல்ல திட்டமே...


Gopalakrishnan Thiagarajan
ஜூன் 21, 2025 15:47

இந்த கடைகளை PM Janaushadhi kendra idam ஒப்படைத்து விடலாம். அவர்கள் திறமையாக நடத்துவார்கள். அதுடையகாபிதானே இக்கடைகள்


Bhaskaran
ஜூன் 21, 2025 14:21

பணிபுரிபவர்கள் ஊதியம் கூட காட்டாதே அதிகாரி


Kulandai kannan
ஜூன் 21, 2025 12:31

தினமும் 5000 ரூபாய்க்காவது விற்றால்தான் break even. நஷ்டத்தில் பெருமை வேறு.


chinnamanibalan
ஜூன் 21, 2025 12:13

அரசு செய்யும் வியாபாரத்தில், மதுக் கடைகளில் மட்டுமே பல்வேறு ஊழல்களுக்கு நடுவிலும், வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இது தவிர மின்சாரம், பொதுப் போக்குவரத்து போன்ற அனைத்திலும் கோடிக் கணக்கில் அரசுக்கு நஷ்டமே. இதில் மருந்து வியாபாரம் மட்டும் எவ்வாறு விருவிருப்பாக நடக்கும்?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 21, 2025 09:19

மாதம் 20000க்கு விற்பனை.கடையில் வேலை பார்க்கும் உடன்பிறப்புக்கு சம்பளம் , .கடை வாடகை மின்சார மற்றும் இதர செலவுகள் என கணக்கிட்டால் இலாபம் ஒரு குவார்ட்டரும் ஊறுகா பாக்கெட்டும் மட்டுமே .


V RAMASWAMY
ஜூன் 21, 2025 08:57

ஒரு மருந்து பட்டையே 500, 600க்கும் விற்கும் வேளையில் தினமும் ரூபாய் 800 என்பதில் என்ன அபாரம் இருக்கிறது? இது ஒன்றும் புது யோசனை அல்ல. பிரதான் மந்த்ரி பாரதீய ஜெநௌஷதி பரியோஜன என்கிற திட்டத்தின் cut, copy paste தான் அது.


Ramesh
ஜூன் 21, 2025 07:40

திமுக உ . பி., களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகைக்கு இந்த மருந்தகங்களில் மருந்து வாங்க ஆணையிடப்பட்டிருக்கிறது. அவர்களின் திறமையை பொறுத்துதான் கட்சி பொறுப்புகளும் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்தி