உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிள்ளையார் சுழி போட்டுத்தந்த தயாளு

பிள்ளையார் சுழி போட்டுத்தந்த தயாளு

கடந்த 1971 சட்டசபை தேர்தலுக்கு முன் ஒரு நாள், கருணாநிதியும் நானும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது, 'இந்த தேர்தலில் போட்டியிடுகிறாயா', என என்னிடம் கேட்டார். உடனே, 'இப்போது வக்கீலாக இருக்கிறேன். இதுதான் எனக்கு பிடிக்கிறது. இதுவே போதும்,' என அவருக்கு பதில் கூறினேன். அதற்கு அவர், 'சீட் வேண்டாமா உனக்கு,' என கூறிச்சென்று விட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த கருணாநிதியின் மனைவி தயாளு, 'ஏன் சீட் வேண்டாம் என மறுத்தாய்?' என என்னிடம் கேட்டார். அதற்கு, 'என்னால், தேர்தலில் செலவு பண்ண முடியாது,' என்றேன். அதற்கு தயாளு, 'அதையெல்லாம் அவர் பார்த்துப்பார். நீ தேர்தலில் நில்,' என கூறியதோடு, 10 ஆயிரம் ரூபாயையும் தந்தார். நான் இப்போது, எம்.எல்.ஏ.,வாக, அமைச்சராக, தி.மு.க.,வின் பொதுச்செயலராக எல்லாம் இருக்கிறேன் என்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டு தந்தவர், கருணாநிதியின் மனைவியும், ஸ்டாலினின் தாயாருமான தயாளு தான். -- துரைமுருகன், பொதுச்செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி