உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல. தமிழகத்தை, தமிழகத்தின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழக மக்கள்!https://x.com/mkstalin/status/1943938151179071626விறுவிறுவென நடைபெற்று வரும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்ட தி.மு.க.,வினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்ட தி.மு.க.,வினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

R.P.Anand
ஜூலை 14, 2025 10:29

நம்ம கண்ணுக்கு குரஞ்சது 25 கட்சி இருந்தா தான் கூட்டணி. இல்லேன்னா அது .......


பிரேம்ஜி
ஜூலை 13, 2025 07:26

யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணியே 2026 இல் வெல்லும்! எதிரணி பலம் இல்லை! அவ்வளவுதான் விஷயம்! மற்ற செய்திகள் பேச்சுக்கள் எல்லாம் ஊடகங்களின் வெற்று கணிப்புகளே!


V RAMASWAMY
ஜூலை 12, 2025 18:46

ஆஹா, என்ன கருத்து, மாடல் அரசின் சாதனைகளை எடுத்து சொன்னால் போதுமே, சொல்லுங்கள், அதுதான் மக்களுக்கு வேண்டும், தே ஜ கூட்டணிக்கும் அதுதான் நல்லது. அதுவே நீங்கள் தே ஜ கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் யுக்தியாகவும் அமையும்.


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2025 18:32

"தமிழகத்தின் மண், மொழி, மானம்" காக்க என்றதொரு எண்ணம் யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் திருட்டு திராவிட மடியல் அறிவிலி அரசுக்கு ஓட்டு போடமாட்டார்கள்


Mani . V
ஜூலை 12, 2025 18:09

ஆமா பாஸ் அது ஒரிஜினல் கூட்டு இல்லை பொரியல். உங்களதுதான் ஒரிஜினல் சுவை, மணம், உப்பு நிறைந்த கூட்டு.


பாரத புதல்வன்
ஜூலை 12, 2025 16:51

மண்ணை கடத்தி கொள்ளை அடிப்பது தி மு க சாராயம் விற்று சமூகத்தில் ஒழுக்க கேடுகளை விதைத்தது மக்களின் மானத்தை சீர்குலைத்து வருவது தி மு க மொத்தத்தில் நாடு முழுவதும் போதையில் தள்ளாடி அதை மறைக்க மொழியை வைத்து அரசியல் செய்வது, கல்வியை கெடுத்து வருவது தி மு க கட்டபஞ்சாயத்தை காவல் நிலையங்களில் கட்டவிழ்த்து விடுவது தீ மு க... அப்புறம் எப்படி நீங்கள் நாட்டை காக்க ஓரணியில் நிக்குறீங்க டோப்பா தந்தையே!


Rengaraj
ஜூலை 12, 2025 15:42

அய்யா முதல்வர் அவர்களே கூட்டணி என்பதற்கு என்ன ஒரு விரிவாக்கம், என்ன ஒரு தெளிவுரை. ? நீங்கள் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அதில் சில சந்தேகங்கள் வருவதை தவிர்க்கமுடியவில்லை. எதிர்கேள்வி கேட்காமல் பதில் சொல்லுங்கள் ? ரவுடிகளுடன் திமுகவினருக்கு எந்த விதத்திலும் கூட்டணி கிடையாது என்று உறுதியாக சொல்லலாமா ? நேர்மையற்ற அரசாங்க அதிகாரிகளுடன் திமுகவினருக்கு எந்தவிதத்திலும் கூட்டணி கிடையாது என்று உறுதியாக சொல்லலாமா ? உங்களுக்கு கூட்டணி கட்சியினரிடையே எந்தவிதத்திலும் பிரச்சினை இல்லை என்று உறுதியாக சொல்லலாமா ? அப்படியென்றால் சமீபத்திய வைகோ வின் கூட்டத்தில் பிரச்சினை ஏன் வந்தது ? அதற்கு நேரடியாக உங்கள் கட்சியினருக்கு தொடர்பு இல்லையென்றாலும் அந்தந்த மாவட்டங்களில் இரு கூட்டணியிடரிடம் புகைச்சல் எதுவுமே இல்லை என்று உறுதியாக கூறமுடியுமா ?


vadivelu
ஜூலை 12, 2025 16:33

மிக முக்கியமானது, அடிப்படை மதவாதி களுடன் கூட்டணி இல்லை என்று கூற முடியுமா.


Kumar Kumzi
ஜூலை 12, 2025 15:13

ஓங்கோல் துண்டுசீட்டு கோமாளியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது


Indian
ஜூலை 12, 2025 15:11

தி மு க வெற்றி உறுதி .


Mettai* Tamil
ஜூலை 12, 2025 15:30

தி மு க தோல்வி உறுதி .


Indian
ஜூலை 12, 2025 17:01

2026 மட்டுமல்ல 2031 யிலும் தி மு க தான்


MARAN
ஜூலை 12, 2025 18:29

மண்ணு திருடன் திமுக மண்ணை கவ்வும்


பேசும் தமிழன்
ஜூலை 12, 2025 23:41

வாய்பில்லை ராஜா .....வாய்ப்பே இல்லை ....தமிழக மக்கள் மறுபடியும் ஏமாற தயாராக இல்லை.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 15:08

1967 முதல் திமுக கூட்டணி வைக்காத ஒரே கட்சி நாதக தான். அது சரி. சொந்த பி டீமுடன் கூட்டு வைக்கிற அவசியமில்லை.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 12, 2025 18:04

நாம் தமிழர் கட்சி தி.மு.கவின் நேர் எதிர் கொள்கை கொண்ட கட்சி. அந்த கட்சியுடன் ஏன் இந்த திருட்டு சாக்கடை கட்சியை ஒப்பிடுக்கிறீர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை