உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் தி.மு.க.,- த.வெ.க., இடையே தான் போட்டி: விஜய் உறுதி

2026ல் தி.மு.க.,- த.வெ.க., இடையே தான் போட்டி: விஜய் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: பா.ஜ., வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழகத்தில் நடப்பது என்ன? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=362vrb07&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல செயல்பாடுகள், பா.ஜ., தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன. தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.தி.மு.க.,வை பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ., மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை. மூன்று முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில், 'நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.,வும். 'தாங்கள்தான் பா.ஜ.,விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி. தி.மு.க.வும் பா.ஜ.,வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது. தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026ம் ஆண்டு தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான். பா.ஜ., மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி. மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வாகை சூடுவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

R.MURALIKRISHNAN
ஏப் 13, 2025 14:18

என்னலே, 2026 படத்திலே காமடி ஆக்டும் நீங்க தான் பண்றீகளோ


நிக்கோல்தாம்சன்
ஏப் 13, 2025 13:01

உங்களுக்கு யாரு வசனம் எழுதி கொடுக்குறா பூமர் சார் , பொன்முடி என்ற அமைச்சர் தமிழக பெண்களை எந்தளவு கீழ்த்தரமான பேசியுள்ளார் உன்னோட கடும் கண்டனம் அவரை ஒரு வழி பண்ணியிருக்க வேண்டும் , ஆனால் சே அது ஏண்டா உங்களுக்கெல்லாம் பெண்கள் என்றால் இளக்காரம் , தூ


செல்வா
ஏப் 12, 2025 22:04

நடுவுல வந்து இவன் வேற காமெடி பண்ணிட்டு இருக்கான். நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட


Jameson.
ஏப் 12, 2025 21:42

என்ன Bro அடுத்த உலக நாயகன் நீ Bro


பேசும் தமிழன்
ஏப் 12, 2025 18:56

அட இவர் வேற.... குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு..... இது எப்படி இருக்கு என்றால்.... நானும் ரவுடி தான்..... நானும் ரவுடி தான்..... என்று கூறுவது போல் இருக்கிறது.....உம்மை பந்திக்கே அழைக்கவில்லை.... இந்த லட்சணத்தில் இலை கிழிந்தது என்று கூறலாமா ???


jss
ஏப் 12, 2025 18:50

இவரெல்லாம் ஒரு தலைவர் ஹும் எல்லாம் நம் தலையைழுத்து.3/4 வருடங்ங்களுக்கு முன்பு உலக நாயகன் இப்படி பேசித்தான் எல்லோரையும் நம்ப வைத்து பொறவு திமுக பக்கம ஒடிவிட்டார். இவரை செட்டப் செய்ததே லயோலா காலேஜ குரூப். திமுகவுக்காக ஒட்டை பிரிப்பதற்கான சதியில் உதவும் ஒன்று


Rasheel
ஏப் 12, 2025 18:32

வரி கட்டாமல் ஏமாத்துபவர் எல்லாம் அரசியலுக்கு அடைக்கலம் தேடி வருகிறார். பம்மாத்து காட்டுகிறா். இதிலே எஸ்கேப் ஆனவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே.


Ambedkumar
ஏப் 12, 2025 18:08

இருவரும் அப்படி ஒரு ஓரமாகப் போய் போட்டி போடுங்கள்.


sankaranarayanan
ஏப் 12, 2025 17:28

இவன் கமலின் சிஷ்யன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்ற துப்பில்லாதவர்கள் மக்கள் மன்றத்தில் மரண அடி வாங்கியாகிவிட்டது அது போன்றே பீகார் சாணக்கியக்கியனை 400-கோடிக்கு வாங்கி அவன் ஏப்பம் விட்டு போகப்போகிறான் கடைசியில் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று கை விரித்து ஆடவேண்டியதுதான் பாக்கி நீ ஒரு தேசிய காட்சியின் கூட்டை துச்சமாக நினைக்காதே


Oru Indiyan
ஏப் 12, 2025 17:20

தகரமுடி. உங்க கிறிஸ்துவ மதத்தை பற்றி பேசி இருந்தால் இந்நேரம் என்ன குதி குதிச்சிருப்பே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை