உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்?

காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்?

சென்னை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக நேற்றிரவு 10.10 மணிக்கு, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை, இன்று (ஜன.,20) 9.54 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலையைக் கண்டித்து நேற்றிரவு 10.10 மணிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது' என்று அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d7yhboox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இதே விவகாரத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று (ஜன.,20) காலை 9.54 மணிக்கு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வார்த்தைகள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறதுகனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு.கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புகைப்படங்கள் இதோ!

அண்ணாமலை நேற்றிரவு 10.10 மணிக்கு வெளியிட்ட அறிக்கை!இ.பி.எஸ்., இன்று (ஜன.,20) காலை 9.54 மணிக்கு வெளியிட்ட அறிக்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Gowri Sankar
ஜன 22, 2025 05:28

எது எப்படியோ திமுகாவின் அடிமை வேலையை அண்ணாமலையுடன் சேர்ந்து சிறப்பாகவும் மறைமுகமாகவும் செய்துவருகிறது.


V GOPALAN
ஜன 22, 2025 04:47

நீதிமன்றம் மற்றும் முன்னாள் கலெக்டர்கள் இறை அன்பு இந்த கொலைக்கு உடந்தையானவர்கள் எனபெல் இவர்கள் தங்கல் கடமையை ஒழுங்காக செய்தார்கள் என்றால் இந்நேரம் எல்லா குற்றவாளிகளும் கொள்ளையர்களும் தண்டனை பெற்றிருப்பர்


Kasimani Baskaran
ஜன 20, 2025 19:55

வெட்கமே இல்லாமல் உருட்டித்திரியும் தீம்க்கா மற்றும் அடிமைகள் காப்பி அடிப்பதற்கும் கூட முட்டுக்கொடுத்து மகா கேவலம். மசாலா குறைபாடு காரணமாக அத்தனையும் பிட் அடித்து தேறிய கூட்டம்.


..
ஜன 20, 2025 19:41

எடப்பாடி ஐயா அப்டேட் ஆக தாமதமாகிறது.அண்ணாமலை விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் வைத்துள்ளார் இதுபோன்ற ஒரு தலைவர்தான் தமிழ்நாட்டுக்கு வேண்டும்


Karthik
ஜன 20, 2025 19:30

காப்பி பேஸ்ட் பண்ணியாச்சும் அறிக்கை விடுறாறேனு சந்தோச படுவீங்களா.. அதவுட்டுபுட்டு..


m.arunachalam
ஜன 20, 2025 13:59

காப்பி பேஸ்ட் , டீ பேஸ்ட் என்று விமர்சனம் செய்வது போல் எளிதானதா கட்சி நடத்துவது ? சென்னை முதல் குமரி வரை எத்தனை குறுநில மன்னர்கள் . அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை அவருடையது .


Natchimuthu Chithiraisamy
ஜன 20, 2025 13:58

பேரையும் மாற்றி சொல்லமுடியாது. 15 நாள் என்பதை ஒருநாள் கூட்டி இருக்கலாம். அப்படியே காப்பி பேஸ்ட் இல்லை. ஒண்ணா இருந்த நல்லது வேற்று சமூக ஒட்டு இருவருக்கும் வராது


Barakat Ali
ஜன 20, 2025 13:48

சரி . . இருக்கட்டுமே ..... அதனால் என்ன ???? ஸ்டிக்கர் ஒட்டி பெருமைப்படும் செயல் கௌரவமானதா ????


திகழ்ஓவியன்
ஜன 20, 2025 13:12

எடப்பாடி ஒரு வேஸ்ட் அல்லக்கை , ஓசி சோறு தலைவரா waiting list வாட்டர் BOY ஆஹ் தெரியல அப்புறம் இவர்கள் செயும் வேலைக்கு IMPORTANCE , ஸ்டாலின் சொன்ன மாதிரி DONT CARE


dhandapani R
ஜன 20, 2025 13:51

சமூக ஆர்வலரை கொன்ற பிறகும்நீகுடுக்கும் விளக்கம் த்தூ


Duruvesan
ஜன 20, 2025 15:03

அப்புறம் ஏன் மூரக்ஸ் வேலை மெனக்கெட்டு கமெண்ட் போடறே


veera
ஜன 20, 2025 15:47

கனடாவில் குளிர் அதிகம்....அந்த உதரலா இல்லை. பயமா?


N.Purushothaman
ஜன 20, 2025 13:07

அ தி மு க ஐ டி விங் கோவை சத்யன் இருக்கும் வரை இப்படி ஒரு நிலை வந்ததில்லை ....எடப்பாடி வாரிசு அரசியலை சற்று தள்ளி வைக்காவிடில் கட்சி காணாமல் போகும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை