உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி கயிறு கட்டும் பழக்கம்; கவர்னர் ரவி வேதனை

ஜாதி கயிறு கட்டும் பழக்கம்; கவர்னர் ரவி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரசியல் காரணங்களுக்காக, ஜாதி, மொழி, இனம், மத அடிப்படையில், மக்களை பிளவுப்படுத்துகின்றனர். ஜாதி அடையாளத்தை காண்பிக்க, இன்றும் கயிறு கட்டும் பழக்கம் இருப்பது வேதனை அளிக்கிறது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.நம்நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

நம் நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் மக்கள் வாழ்ந்தாலும், மாநிலங்கள் உருவான தினத்தை கொண்டாடும் போது, அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த தினத்தை, அந்தந்த மாநில அரசுகள், கலாசார நிகழ்வுகள் நடத்திக் கொண்டாடி வந்தன. பிரதமர் மோடி, 'நாடு முழுதும் கொண்டாட வேண்டும்' என்றார்.அதன்படி, இன்று நாட்டில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. மாநிலங்கள் உருவான தினத்தை, ராணுவ வீரர்களும் பெருமையாக கொண்டாடுகின்றனர்.நம் பாரதம் ரிஷிகள், குருக்கள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சூழலிலும், மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். பழைய பாரத நாட்டில், பிரிவினை என்பது கிடையாது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடும் கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், இங்கு பிரிவினை தோன்றியது. சிறந்த நிர்வாகத்திற்காகவே மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, ஜாதி, மொழி, இனம், மத அடிப்படையில், இங்குள்ள மக்களை பிளவுப்படுத்துகின்றனர். ஜாதி அடையாளத்தை காண்பிக்க, கயிறு கட்டும் பழக்கம் இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது. நாட்டில் ஒரே மண்ணில் வசிக்கும் மக்களுக்கு, பிரிவினை என்பது எதற்கு. பாரதம் ஒரே கலாசாரம் உடைய நாடல்ல. இங்கு பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. மாநில மற்றும் உள்ளூர் கலாசாரத்தை நாம் கொண்டாட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், ராணுவ தக் ஷின் பாரத் பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங், எழுத்தாளர் கரியாளி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
நவ 05, 2024 17:24

அதுதான் திராவிட சனாதனம். சாமி இருக்கோ இல்லியோ ஜாதி இருக்கும்.


Venkatesan Srinivasan
நவ 05, 2024 11:53

அதைத்தான் பெரும்பாலான மதம் மாறியவர்கள் ஆவணங்களில் ஜாதி குறியீடு தவிர்க்காமல் இட ஒதுக்கீடுகள் பெற்றுக்கொண்டு உண்மையில் தகுதியானவர்களுக்கு இடையூறு செய்கின்றனர். இட ஒதுக்கீடுகள் இந்துமத ஜாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். கிருஸ்தவ முஸ்லிம் மதங்களில் அவர்கள் கோட்பாடுகள் படி ஜாதி பிரிவுகள் இல்லை. அவர்கள் எல்லோரும் ஒரே இனம். அரசியல்வாதிகள் ஓட்டு பிச்சைக்காக அவர்களுக்கும் ஜாதி அடையாளம் கொடுத்து இட ஒதுக்கீடு முறைக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.


Sridhar
நவ 05, 2024 11:10

பல்வேறு கலாச்சாரம் உடைய நாடுனு சொல்றீங்க, அதேசமயம் அந்த கலாச்சார அடையாளங்களை அணிந்தால் தப்புண்றீங்க . அவங்க கயிறு கட்டினா என்ன பிரச்சனை? குல்லா போடும்போது ரைட்டுன்கறீங்க, சிலுவ போட்டாக்கூட ஓகே ஆனா கயிறுன்னா வலிக்குதா? ஜாதி வேணாம்னு சொல்றவங்கள நிக்கவச்சு சாட்டையால அடிக்கணும். சரியா சொல்லுங்கய்யா, ஜாதி ஏற்றத்தாழ்வு வேணாம்னு. என் ஜாதி இது, என் பழக்கவழக்கங்களில் பெருமை கொள்கிறேன் அதே சமயம் மத்தவங்க ஜாதியை மதிக்கிறேங்கற நிலைப்பாட எடுக்க வலியுறுத்துங்க. நீங்க நினைச்சாலும் ஜாதியை அழிக்கமுடியாது. அதுனாலதான் கேவலமான அரசியல்வாதிங்க கூட வெறும் வாயில ஜாதி வேணாம்னு போலியா சொன்னாலும், அசல்ல ஜாதிய வச்சுதான் அவுனுக வாழ்க்கையே ஓடும். வெறும் வேதனைகளை எல்லாம் ஒதுக்கி ஓரமா வச்சுட்டு எல்லா ஜாதிகளையும் இணைச்சு செயல்படும் அமைப்பை உருவாக்க என்ன தேவையோ அத்தைமட்டும்செய்யுங்க. இந்திய மதமும் ஜாதியும் ஒன்று. ஒன்றில்லாம இன்னொன்னு இல்ல. வெளிநாட்டுக்காரன் ஜாதி வேற்றுமையை குறிவைக்கறதே இந்திய தன்மையை அழித்து, அவன் மதத்தை உள்ளே புகுத்தறதுக்குத்தான் பிஷ்ணோய் குரூப் மாதிரி நிறைய குரூப்கள் உருவாகி இந்திய மதத்தின் மீது ஒரு மரியாதையை, பயத்தை அல்ல, உருவாக்கினால்தான், கேடுகெட்ட பயல்கள் இஷ்டத்துக்கு இந்தியாவை கிண்டலடித்து பேசுவதை நிறுத்துவங்க. பவன் கல்யாண் மாதிரி நிறையபேர் தமிழ்நாட்டிலும் வரணும்.


Mohamed Younus
நவ 05, 2024 10:09

சாதி வேறுபாடு மட்டும்தான் இந்த நாடு பின்னடைவை நோக்கி செல்ல காரணமா? மத துவேஷங்களும் இன்னொரு காரணம் . அதுவும் தேர்தல் வரும்போது அதிக மத துவேஷங்களை பரப்பி விட்டு அதன் மூலம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த கட்சிகளை என்று இந்த நாட்டு மக்கள் நிராகரிக்கிறார்களோ அன்று தான் இந்த நாடு முழுமையாக சுபிட்ச்சம் அடையும் .


Sridhar
நவ 05, 2024 11:15

இந்தியாவில் இந்திய மதத்தினருக்கு மட்டும்தான் ஓட்டுரிமை என்று அறிவித்தால் இந்த பிரச்சனை ஒரேநாளில் தீர்ந்துவிடும்.


HoneyBee
நவ 05, 2024 08:59

ஆனால் ஜாதியை வைத்து ஓட்டு வாங்கும் முறை மட்டும் சரியா. இவனுக்கு மட்டுமே ஓட்டு போடு என்று ஜாதி அரசியல் பேசும் மதத்தினரும் மாறினால் இது மாறும்... ஆக மொத்தத்தில் ஜாதி வைத்து இட ஒதுக்கீடு மட்டும் வேண்டும் ஆனால் ஜாதி வேண்டாமா.


THAMIZH NENJAM
நவ 05, 2024 08:58

ஒவ்வொருவருக்கும் மத அடையாளம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாதி அடையாளம். ஒருவர் தன் பெயரை, மதத்தை , மாற்றி கொள்ள இயலும். ஆனால் தாய் மொழியையும் சாதியையும் மாற்ற இயலாது.


முருகன்
நவ 05, 2024 07:35

ஜாதியை வைத்து அரசியல் செய்வதால் வரும் பிரச்சினை இது


கட்டத்தேவன்,,திருச்சுழி
நவ 05, 2024 09:01

இத்தனை நாளா இந்த திருட்டு திராவிடனுங்க ஈர வெங்காய ராமசாமிதான் சாதியை ஒழிச்சாருன்னு உருட்டிக்கிட்டு கெடந்தானுகளே அது பொய்யா கோப்பால்? அப்படின்னா ஈ.வெ.ராமசாமி நாயக்கன் ஜாதியை ஒழிக்காம எவனுக்கும் தெரியாம அதை ஒளிச்சு வச்சிருந்துருக்காரு அப்படித்தானே? இதுக்கு திக, திமுகவை சேர்ந்த திராவிடனுங்க என்ன வியாக்கியானம் சொல்லுவானுங்க?


Ms Mahadevan Mahadevan
நவ 05, 2024 06:12

சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் இந்நாட்டில் ஜாதி மத பேதம் நிலவுகிறது என்றால் அதற்கு காரணம் அரசியல் கட்சிகள்தான். ஜாதி மதம் பார்த்து சலுகை வழங்கி யும், தொகுதியில் எந்த ஜாதி அதகம் என்று பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியும் மற்றும் இதுபோன்ற ஜாதி சலுகைகள் கொடுத்தும் மக்களை பிளவு படுத்தி வைத்திருப்பதுதான் காரணம் . போலியான சமூக நீதி பேசி வாங்கு வங்கி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி பணம் அதிகாரம் பெற இது மாதிரி செய்கிறார்கள்


பாவாணன்
நவ 05, 2024 06:04

சாதி கயறு மட்டும் அல்ல இந்தியா முழுக்க சாதியை தன் பெயருக்கு பின்னல் சுமக்கும் அனைத்து சாதியினருகும் இது பொருந்தும்


Kasimani Baskaran
நவ 05, 2024 05:43

ஒரு பிரிவு தன்னை திராவிடன், தமிழகத்தின் உரிமையாளன் என்று சொல்வது மட்டும் சரி என்று சொல்லிவிட முடியுமா? ஜாதி என்பது ஒரு அடையாளம் - அதில் குறை ஒன்றும் இல்லை. அதை வைத்து ஒரு பிரிவினரை வன்மத்துடன் விமர்சிப்பதுதான் தவறு.


J.Isaac
நவ 05, 2024 10:35

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த ஒரு பிரிவினருக்கு கீழ் தான் அனைத்து இன மக்களும் கல்வி அறிவு இன்றி, அடிப்படை வசதி இன்றி அடிமைகளாக இருந்துள்ளனர் என்பது வரலாறு தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை