உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு பஸ்களில் திமுகவினர் அழைத்துவரப்பட்டனர்.பயணிகளுக்காக இயக்கப்பட வேண்டிய அரசு பஸ்கள் இப்படி, அரசியல் கட்சி மாநாட்டுக்கு திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். பஸ்கள் வராமல் பயணிகள் பல மணி நேரம் வேதனையுடன் காத்திருக்கும் படங்கள் தினமலர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகின. இணையத்திலும் நெட்டிசன்கள் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர். தினமலர் சமூக வலைதளத்தில், 1. பயணிகள் அவதி, 2. காத்திருந்து… காத்திருந்து, 3. வந்த இடத்தில் லாபம் பாக்கனும்ல… என்ற தலைப்பில், படத்துடன் 3 செய்திகள் கார்டாக வெளியிடப்பட்டு இருந்தது. இதனை மேற்கோள் காட்டி, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களை நம்பி ஓட்டளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதற்கான விலையை இன்று மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நிரந்தரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய நாள் இனி வெகுதூரத்தில் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.தினமலர் சமூக வலைதள பக்கங்களில் வெளியான செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

MP.K
டிச 30, 2025 14:23

அவர் தினமும் தான் அறிவாலயத்தில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் வீட்டுக்கு செல்கிறார்


Chandru
டிச 30, 2025 13:39

எங்கே ? மாமியார் வீட்டிற்கா?


A P
டிச 30, 2025 13:27

கொள்ளைக்கார தலைவனின் உடன் பிறப்புக்களே , இதற்கு பதில் சொல்லுங்களேன் . " கட்சி மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால் பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். .... தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக வெளியூர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர். நீலகிரியிலும் அரசு பஸ்கள், பல்லடம் திமுக மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால் உள்ளூர் பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30க்கும் அதிகமான அரசு பஸ்கள் கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டதாக குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறினார்........" இந்த செய்தி இனிக்கிறதா வாலாட்டும் பிராணிகளே .


Svs Yaadum oore
டிச 30, 2025 12:24

மாணவர்கள் அதற்கும் மேல் பள்ளி மாணவிகள் கஞ்சாவிற்கு டாஸ்மாக் ஆட்பட்டு சீரழிந்து கிடக்கிறார்கள், அரசு நிர்வாகத்தின் அத்தனை செயலர்களும் , ஆசிரியர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள் .....ஐந்து வருடத்தில் அஞ்சரை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.... 40,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி ....இப்படி ஒரு கேவல விடியல் அரசாங்கம் ....இதை சரி செய்ய துப்பில்லை ...


Anantharaman Srinivasan
டிச 30, 2025 11:58

சீமான் போல் அரசின் அத்துமீறல்களை இடித்து சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும்..


திகழ்ஓவியன்
டிச 30, 2025 11:52

மோடி சொன்ன 500 1000 நோட்டு செல்லாது என்ற சொன்னமாதிரி அன்னமலை பேச்சு அரங்கேறாது கானல் நீர் தான்


SUBRAMANIAN P
டிச 30, 2025 13:38

என்னமாதிரி டிசைன்


திகழ்ஓவியன்
டிச 30, 2025 11:49

இப்படி சொல்லி சொல்லியே உன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் எடபடியார் பாவந் உன் நிலை , சீமான் நீர் விஜய் எல்லாம் ஸ்ட்ரீட் fighters


Svs Yaadum oore
டிச 30, 2025 11:44

இந்த மாநாட்டுக்கு அரசு பஸ்களில் கட்சி கொடியை கட்டி அழைத்து சென்றதால் பலர் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். .... தொடர் விடுமுறை, புத்தாண்டு காரணமாக வெளியூர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று காலை முதல் காத்திருந்தனர். நீலகிரியிலும் அரசு பஸ்கள், பல்லடம் திமுக மாநாட்டிற்காக அனுப்பப்பட்டதால் உள்ளூர் பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். நீலகிரியில் 165 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் 30க்கும் அதிகமான அரசு பஸ்கள் கட்சியினரை அழைத்து செல்ல கொண்டு செல்லப்பட்டதாக குன்னூர் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறினார்........


Svs Yaadum oore
டிச 30, 2025 11:41

பல்லடத்தில் சமீபத்தில் நடந்த தி.மு.க மகளிர் மாநாட்டிற்காக, தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் TNSTC அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால், உள்ளூர் பயணிகள் பேருந்து வசதியின்றி பெரிதும் அவதிப்பட்டனர், சிலர் சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நீலகிரி, கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் மாநாட்டிற்காக திருப்பி விடப்பட்டதால், வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ...


அருண், சென்னை
டிச 30, 2025 11:31

இனி வீட்டுக்கு போனா என்ன, போகலான என்னா?.. சுருட்டவேண்டியதை குடும்படசமேதராய் மொத்தமாய் சுருட்டியாசு...மறுபடியும் ஒரே ஒரு சந்தர்பம் ஊபீஸ் மற்றும் சிறுபான்மையினர் போராடி வாங்கிக்கொடுத்தால் மொத்த தமிழ்நாட்டையும் WAKF போர்டுக்கு எழுதிக்கொடுதுவிட்டு ஓங்கோல் போய் செட்டிலாகலாம்....மக்களின் கையில்தான் உள்ளது... தமிழ்நாட்டை தமிழர்களுக்காக விட்டுவைப்பார்களா?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி