தி.மு.க., கலாசாரமே குண்டர்கள் தான்
திருவாரூரில் தி.மு.க.,வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது கும்பல், தன் வீட்டின் முன் பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவரை தாக்கியுள்ளனர். அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை குண்டர்களை உள்ளடக்கியதே, தி.மு.க.,வின் அரசியல் கலாசாரமாக இருக்கிறது. இப்படி குண்டர்கள் மற்றும் வன்முறையில் செழித்து வளரும் தி.மு.க.,வின் செயல்பாடுகள் சகிக்க முடியாதவை. திருவாரூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க குண்டர்கள் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த போதே, பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல், பிரியாணி கடைக்காரரையே அடித்து நொறுக்கிய தொண்டர்களை கொண்ட இயக்கம் தான் தி.மு.க., இது மாதிரி சம்பவங்கள், இனி எங்கு நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு தப்ப முடியாது. -- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்