உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களின் தூக்கத்தை தொலைத்த தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., பதிலடி!

மக்களின் தூக்கத்தை தொலைத்த தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., பதிலடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரியான வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் மக்கள் நேற்றிரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்ததுக்கு காரணம் தி.மு.க., அரசு தான்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை பாதிப்புகளை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மழை வெள்ளத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த 50 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனை சரி செய்ய அதிக செலவாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க., அரசு நிவாரணம் வழங்க வேண்டும். 55 வீடுகள் நீரில் முழ்கி உள்ளன. கரையோர மக்களுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தை வழங்க வேண்டும். நெற்பயிர்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம் என எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரியான வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் மக்கள் நேற்றிரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்ததுக்கு காரணம் தி.மு.க., அரசு தான். நேற்றிரவு கனமழை பெய்ததால், மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். விழுப்புரத்தில் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்கியதற்கு காரணம் தி.மு.க., அரசு தான். செயலற்ற அரசு தி.மு.க., அரசு. சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விழுப்புரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

orange thamizhan
டிச 03, 2024 09:54

இவர்கள் ஆட்சியில் அவர்களையும் அவர்களின் ஆட்சியில் இவர்களையும் வசை பாடி கொண்டே இருப்பார்கள்.....நமக்கான அரசு எப்போது வரும்......நல்லவர்களை நாம் தான் சரி பார்த்து (அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு) தேர்ந்து எடுக்க வேண்டும்..... இல்லை என்றால் repeat காட்சிகள் தான்......let's see in 2026.....


Constitutional Goons
டிச 02, 2024 20:46

ரெட் அலெர்ட் என்றால் 20 cm மழை எல்லா இடத்திலும் பெய்யும் என்று அர்த்தமில்லை. எந்த இடத்தில பெய்யும் என்றும் கூறமுடியாது. 50 cm க்கும் 20 cm க்கும் ஒரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கமுடியாது. நடுக்கடலில் நின்றுகொண்டே இருக்கும் என்றும் கணிக்க முடியாது. நில பரப்பிலும் அப்படியே நிற்கும் என்றும் கணிக்க முடியாது. இந்த பக்கம் போகும் அந்த பக்கம் போகும் எந்த பக்கம் போகும் என்றும், முன்கூட்டியே கணிக்க முடியாது . என்னதான் முடியும் என்றும் கூறமுடியாது. இப்படிதான் இந்த அளவுக்குத்தான் விஞ்சானம் வளர்ந்துள்ளது.


MADHAVAN
டிச 02, 2024 18:28

ஓக்கி புயல், கஜா புயல் , 2015 ல செம்பரம்பாக்கம் ஏறிய திடீர்னு தொறந்து விட்டது, இது எல்லாம் மக்கள் மறக்கமாட்டோம்,


Narayanan Muthu
டிச 02, 2024 18:26

2015 செம்பரம்பாக்கம் ஏரி ஜெயலலிதா சென்னை மக்கள் மறக்க முடியுமா பொருட் சேதங்களும் உயிர் சேதங்களும் அப்பப்பா


Narayanan Muthu
டிச 02, 2024 18:24

2015ல் சென்னை மக்களின் தூக்கம் தொலைந்தது போலவா


Mohammad ali
டிச 02, 2024 18:24

மக்கள் தூக்கத்தை தொலைத்தது திராவிட கட்சிகளால்தான்


Palanisamy T
டிச 02, 2024 18:11

இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டார்கள் இருந்தும். என்னப் பயன்? ஆட்சியிலில்லாத போது அவரவர் மேல் துர்நாற்றம் நிறைந்த சேற்றை இன்னும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். மாற வில்லையே, ஏன்? ஒருவேளை பாஜக தமிழகத்தில் நன்கு வேரூன்றிவிட்டு ஆட்சிக்கு வந்தால் அப்போது புத்திவருமோ? இந்த ஒருவரும் அவரவர் ஆட்சியை என்ன விலைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டு மென்ற நல்ல எண்ணமோ? அவரவர் தங்களின் தவறுகளை உணர்ந்து மாற்றிக் கொண்டு நல்லாட்சியைக் கொடுத்தால் நன்று.


sundarsvpr
டிச 02, 2024 17:12

இரண்டு திராவிட கட்சிகளின் விரோத மனப்பான்மை அறிக்கைகளை வெறுத்து ஒதுக்குங்கள். இலவசங்கள் பெறுவதை முதலில் தவிருங்கள். இலவசம் பெறுவது பாவம் என்று மக்கள் கருதினால் ஊழல்கள் குறையும். இயற்கை துன்பங்கள் தீரும்.


nalledran
டிச 02, 2024 17:01

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யோசிப்பது நல்லது.... நீங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது கண்மாய்-குளங்கள் குடிமாரமத்து என்ற பெயரில் தூர்வாரப்பட்டது.. எங்களது ஆட்சியில் தூர்வாரப்பட்ட கண்மாய்-குளங்களால் மழை-வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்பதற்கு அவர் ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாமோ? அப்படிக்கூறிவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கினால் உதவியாக இருக்கும். அதை விடுத்து மக்களின் தூக்கம் தொலைந்து விட்டது என்கிறார். ஒரு வேளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடிமாரத்து பணிகளின் உண்மையை பட்டியலிட்டு காட்டினால் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 14:34

அண்ணே இ பி எஸ், விஜய், எச் ராஜா, அண்ணாமலை எல்லாம் வெள்ளம் பற்றிப் பேசாம மூடிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா அரசின் செயல்பாடுகள் திருப்திகரம். நீங்க, பக்கத்துல யூனியன் பிரதேசத்தில் ஆட்சி செய்யும் உங்களின் எஜமான் பாஜக கூட்டணி அரசின் வெள்ள நிவாரண பணிகள் பற்றி எதாச்சும் சொல்லுங்க பாக்கலாம். அங்கே வசிப்பவர்களும் மக்கள் தான்.


ghee
டிச 02, 2024 15:41

இல்லயே... மழையால் சென்னை மக்கள் அவதி. ..


சமீபத்திய செய்தி