உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

வங்கதேச இஸ்லாமியர், ஒரு கோடி பேர் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கு, காங்., - தி.மு.க., - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆதரவளித்து, ஓட்டுரிமை கோரி போராடி வருகின்றனர். இதை முறியடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பூரில் ஏராளமான வங்கதேசத்தினர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து, நாடு கடத்த வேண்டும். எதிர்கட்சிகளின் கூட்டத்தை சீர்குலைப்பது தி.மு.க., அரசின் நோக்கம். தி.மு.க. ஆட்சியை கவர்னர் 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி, மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த சாராய மரணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லவில்லை. கரூர் உயிரிழப்புகளுக்கு, த.வெ.க., தான் காரணம் என்றால், அக்கட்சியை தடை செய்யுங்கள்; விஜயை கைது செய்யுங்கள். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத விஜய், கட்சியை கலைத்து விடலாம். - அர்ஜுன் சம்பத் நிறுவனர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ