உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்

மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை ராயப்பேட்டையில், இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எப்.ஐ.ஆர்., வெளியானது தவறான முன்னுதாரணம். எப்.ஐ.,ஆர்., வெளியானது எப்படி? உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க., நோக்கம்.

குற்றவாளி

எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சார் யார்? இது குறித்து போலீசார் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உண்மை குற்றவாளி தப்பிக்க கூடாது என அ.தி.மு.க., குரல் எழுப்புகிறது. வேண்டப்பட்ட நபரைக் காப்பாற்ற அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டோம்.

தி.மு.க.,விற்கு பயம்

மாநில அரசு பாலியல் வன்கொடுமை அடைந்த பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை. மடியில் கனம் இருப்பதால் தான் தி.மு.க.,விற்கு பயம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே?. கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் திட்டத்திற்கு முதலில் கோரிக்கை விடுத்தது நான் தான். இந்த திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கோவிட் தொற்று காரணத்தினாலும், சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனதாலும் நிறைவேறாமல் போனது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Constitutional Goons
டிச 31, 2024 16:16

இவர் மடியில் கனமிருப்பதால்தான் இவர் பயப்படுகிறார்


Constitutional Goons
டிச 31, 2024 16:15

இவர் வளர்த்துவிட்ட ஆளுதான் . இவர் ஆட்சியில் அவர் எந்த சாருடன் தொடர்பில் இருந்தாரோ அந்த சார்தான்


தமிழன்
டிச 31, 2024 16:08

யாரு அந்த சாரு என்று அதிமுக t shirt போட்டு பெரிய ட்ரெண்ட் ஆக்கிவிடுவாங்க போல


Venkat, UAE
டிச 31, 2024 14:58

யார் அந்த சார்.


தமிழன்
டிச 31, 2024 21:05

இதே வார்த்தையில் இனி டீ ஷர்ட் விரைவில் வரும்.. அதிகமாக விற்பனை ஆகும் இந்த டி ஷார்ட் வாங்க இப்பவே பதிவு செய்து கொள்ளுங்கள்.


அப்பாவி
டிச 31, 2024 14:34

சி.பி.ஐ தொப்பைகள் வந்து கிழிச்சுறப் போறாங்களாக்கும்?


பேசும் தமிழன்
ஜன 01, 2025 08:21

அப்போ எதற்க்கு விடியல் தலைவர்..... சென்ற அதிமுக ஆட்சியில்... தொட்டதற்கெல்லாம் CBI விசாரணை கேட்டார் ....அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்று கேட்டார் ???


Kadaparai Mani
டிச 31, 2024 13:48

நேற்று அதிமுக போராட்டங்கள் முன்னாள் அமைச்சர்கள் கைது பற்றி எந்த பத்திரிக்கைகளும் செய்தி வெளி இட வில்லை .


தமிழன்
டிச 31, 2024 21:06

இப்போ பத்திரிகையாளர் சங்கம் யார் கையில் இருக்கிறது? என்பது புரிந்தால் இது புரியும்


vadivelu
டிச 31, 2024 13:47

அஹ்ஹ்ஹா என்ன செய்ய முடியும், 80 விழுக்காடு எதிராக இருக்கிறீர்கள் ஆனாலும் ஆளுக்கு 15 விழுக்காடு பிரித்து கொண்டு ஐந்து முனை போட்டி போடுகிறீர்கள். அதனால் கண்டிப்பாக இன்னும் சில ஆண்டுகள் ஆட்டம்தான்.. காரணமே சார்தான்..


SUBRAMANIAN P
டிச 31, 2024 13:32

தமிழ்நாட்டுல இனிமே இந்த திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சா இந்த மக்களைப்போல முட்டாள்கள் உலகத்துலயே கிடையாது.


தமிழன்
டிச 31, 2024 21:09

நீங்க ஒட்டு போடாவிட்டால் என்ன அவுங்களே போட்டுக்குவாங்க.. இவுங்க வாக்காளர்களை விலைக்கு வாங்குவாங்க.. அவுங்க வேட்பாளர்களை வாங்குவாங்க .. தேர்தல் ஆணையம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும். என்ன செய்ய அவர்களும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தானே.. அவர்களுக்கும் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கும் தானே.. நீங்க ஒட்டு போட்டு தான் அவுங்க ஜெயிப்பாங்க என்ற உங்கள் கனவு கனவாகவே இருக்கும்


Dhurvesh
டிச 31, 2024 13:24

கேள்வி கேட்கும் அதிமேதாவிகள்: குமரியில் முதல்வர் காட்டம்:: உன்னை தான் இப்படி சொல்லி இருக்கிறார் நீர் பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன செய்தீரோ , தூத்துக்குடி துப்பாக்கி சூடு டிவி யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன முதல்வர் நீர் தானே


திகழ் ஓவியன், Ajax, Ontario
டிச 31, 2024 13:49

தூர் வாச துண்டு சீட்டை பார்த்து தப்புத் தப்பா படிக்கிறதை விட TV பார்த்து தெரிந்து கொள்வது மேல்.


ஆரூர் ரங்
டிச 31, 2024 13:57

தூத்துக்குடி சம்பவத்தில் திமுக வால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு இந்தாண்டு பிரமோஷன் கொடுத்துள்ளது இந்த ஆட்சியே. பொள்ளாச்சி என்ற கூவத்தான் தெரியும். மூன்றாண்டுகளில் அவ்வழக்கில் ஒரு முன்னேற்றமுமில்லை. அதாவது திராவிஷப் பங்காளிகளின் (ஊரை ஏமாற்றும்) விளையாட்டுச் சண்டை.. அவ்வளவுதான்.


Dhurvesh
டிச 31, 2024 21:31

டேய் இப்ப நான் AJAX இல் இருந்து தற்போது Vancouverக்கு வந்து விட்டேன் ஆகவே ஊர் மாற்றிக்கொள்


Dhurvesh
டிச 31, 2024 13:22

உன்னை அவர் மதிப்பதே இல்லை அப்புறம் என்ன , மதியதார் தலைவாசல் போகவேண்டாம் , அப்புறம் இன்னும் அசிங்கம் ஆகிடும்


abdulrahim
டிச 31, 2024 17:42

ஹெலோ மிஸ்டர் ஆரூர் ராங் , பல ஆண்டுகள் ஆகியும் காஷ்மீர் அப்பாவி நாடோடி சிறுமி ஆசிபா வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவே இல்லையே ஏன் ? அந்த குற்றவாளிகளை கைது செய்யக்கூடாதென பேரணி சென்றது உங்க பாஜக தானே ஹத்ராஸ் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு என்ன ? அந்த பெண்ணின் பிரேதத்தை பெற்றோரிடம் இருந்து போலீஸ் பறித்து கட்டாயமாக எரித்து சாட்சியே இல்லமல் செய்ததற்கு தண்டனை எங்கே ? பல்கீஸ் பானு வழக்கு 11 பாஜக குற்றவாளிகளை ஏன் விடுதலை செஞ்சீங்க ? பசு காவலர்கள் என்ற பெயரில் பாஜக குண்டர்கள் ஆடிய 1000 கொலை செயல்களுக்கு இன்னும் தீர்ப்பு இல்லையே ஏன் ???? இப்போ மட்டும் இவ்வளவு அவசரம் ஏன்? ஆவேசம் ஏன் ????


தமிழன்
டிச 31, 2024 21:10

நீதி மன்றம் சொல்வதையே கேட்பது இல்லை என்று தான் வரும் செய்திகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை