உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'திருப்பரங்குன்றத்தில், ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையின் எல்லையை அளவீடு செய்வதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை'யாக மாற்ற முயற்சிப்பதாக, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், 'மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.இதுபோல, கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்; நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மாற்றப்பட்டன. அதன் மீதான விசாரணை, நேற்று நடந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 'ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை, 'ட்ரோன்' மூலம் அளவீடு செய்ய, விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அளவீடு செய்தால் தான் எல்லையை நிர்ணயிக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை' என வாதிட்டார்.தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை ஹிந்து அமைப்புகள் தடுக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையை, 'ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை' என வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பது குறித்து, கடந்த 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், கடந்த 1931ல் லண்டன் பிரிவியு கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வெயிலுக்குகந்த அம்மன் கோவிலில், ஆடு, கோழி பலியிடும் வழக்கம் உள்ளது. மேலும், தர்கா பகுதி, முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு வழிபாட்டு உரிமையை தர்கா நிர்வாகம் தான் முடிவு செய்யும். வெளியிலிருந்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது' என வாதிட்டார்.இந்த விவாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Vignesh Sivaram A G
ஆக 24, 2025 21:04

யாருக்கு சொந்தம் என்பது முருக பெருமான் தான் தீர்மானிப்பார்.. நமக்கு அந்த உரிமை இல்லை.. அந்த மலையில் முதலில் ஒரு தர்கா அமைக்கவே முருகனின் அருளால் தான் நடந்து இருக்க வேண்டும்..இல்லையெனில் அந்த தர்கா கூட முஸ்லிம்கள் அமைத்து இருக்க முடியாது.. நாம் தான் வீன் போராட்டம் செய்கிறோம்..


Somasundarm Ramakrishnan
ஆக 23, 2025 08:34

Its Greately Impossible


S.jayaram
ஆக 23, 2025 07:34

அது பெரும்பான்மையினர் மீது சிறு பான்மையினர் நடத்தும் தாக்குதல் என்றே கருதவேண்டும். இந்து இஸ்லாமியர்களால் படையெடுப்பு நடத்தி ஆக்கிரமிப்பு செய்த நாடு அதன் பின் அவர்களை வீழ்த்தி ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தினர். 1947 இல் இசுலாமியர்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று பிரித்து சென்றுவிட்டனர். அதன் பின் இந்தியாவின் மீது எந்த உரிமையும் கிடையாது. சிலர் அந்தநாட்டிற்கு செல்ல விரும்பாமல் இந்நாட்டில் இருக்க விரும்பினர், அதற்கு இங்குள்ள முன்னணி தலைவர் களின் முட்டாள்தனம் காரணமாக இந்நாட்டை இந்து நாடு என அறிவிக்காமல் பெரும்பான்மை மக்களுக்குரிய இந்நாட்டை சீரழித்துவிட்டனர். சிறுபான்மையினருக்கு, பெரும்பான்மையினரால் ஆபத்து ஏற்படாமல் இருக்க சில சலுகை களை அவர்களுக்கு வழங்கி பாதுகாப்பு கொடுக்கும் விதமாக ஏற்பாடு செய்தனர். ஆனால் அதை இவர்கள் மதஉரிமை என்ற பெயரில் நாட்டின் பல விதிகளையும் மீறி நடக்க ஆரம்பித்தனர். அப்படித்தான் இந்துக்களின் பூமியான இந்நிலதில் தர்கா என்று ஒன்றை கட்டிக்கொண்டு அதில் இதை செய்வேன், அதை செய்வேன் என்பது வேண்டாத வேலை, வேண்டும் என்றால் உங்கள் சொந்த இடத்திற்கு அந்த தர்காவை மாற்றிக்கொண்டு இந்த ஆடு, கோழி என்று பலியிட்டுகொள்ளுங்கள். இதைப் போல நிறைய இடங்களில் திட்டமிட்டே இசுலாமியர்கள் அக்காலத்தில் அதிகாரம் செலுத்தி இந்துக்களின் வழிபாட்டு தளங்களின் எல்லைக்குள் போய் அடக்கம் செய்துவிட்டு அதை தர்கவாக வழிபாடு நடத்த ஆரம்பித்து உள்ளனர். மலையின் மீது தொழுகை தவிர வேறெந்த நிகழ்வும் நடத்த அனுமதிக்க கூடாது மேலும் அங்கு எவ்வளவு நபர்கள் தொழுகை நடத்தமுடியும் என்பதை கணக்கிட்டு அந்த அளவு நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மலையின் மற்றபகுதிகளுக்கு அவர்களுக்கு நுழைய அனுமதி மறுக்கவேண்டும்.


Rajkumar Ramamoorthy
ஆக 22, 2025 14:30

தி மு க இருக்கற வரைக்கும் இந்த மாதிரி அசிங்கம் தொடரும். ஓட்டுக்காக கோவிலை கூட தாரை வார்க்க தயாராகி விட்டார்கள். முக்கியமான அறுபடை வீடு. அண்ணாமலை இல்லாமல் போயிருந்தால் எழுதியே கொடுத்து விட்டுருப்பான்.


Ramesh Sargam
ஆக 22, 2025 13:23

இந்த இஸ்லாம் மதத்தினர் வீம்புக்கு திருப்பரங்குன்ற மலையை அவர்கள் மலை என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். எல்லாம் அந்த திமுகவினரின் ஆதரவில். 2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். அதற்குப்பிறகு பார்க்கலாம் இந்த இஸ்லாம் மதத்தினர் யார் ஆதரவில் அதை உரிமை கொண்டாடுவார்கள் என்று.


Duraivel Durai
ஆக 23, 2025 05:15

திராவிட கட்சிகளே ஹிந்துக்களுக்கு எதிரானது தான் மிகவும் ஆபத்தானது ஐ லைக் ஒன்லி பிஜேபி பிரதமர் நரேந்திர மோடி ஜி


Rathna
ஆக 22, 2025 11:59

ஏன் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. அவன் தெளிவாக இருக்கிறான். நாம் தான் தெளிவாக இல்லை.


Ramalingam Shanmugam
ஆக 22, 2025 10:56

இந்துமதத்தை வஞ்சிக்கிறார்


Kanns
ஆக 22, 2025 10:25

Throw All ForeignInvaders-Infiltrators-SupportingNative Traitors into AfPakBangla Created Out of India for Muslims If Not Retake it, Settle All of them there Sealing Borders With Fire& Bullets


vivek
ஆக 22, 2025 10:50

nothing understanding.


mansoor ahamed
ஆக 22, 2025 22:18

Its not anyone dads property.... Who the hell are you to say throw a citizen out?... If you want.. you can go to your dads own country which will recognise only your beliefs...


Ganapathy Subramanian
ஆக 22, 2025 10:18

வாஞ்சிநாதன் தனக்கு தேவையான தீர்ப்பு வேண்டுமெனில் எவ்வளவு வேண்டுமானாலும் தாழ்ந்து போவார் என்பது தற்போது உலகறிந்த ரகசியம். அவரை பார் கவுன்சில் தகுதி நீக்கம் செய்து இருக்க வேண்டும். யாருடைய கண்ணுக்கு தெரியாத ஆதரவுடன் அவர் எல்லா இழிவான செயல்களையும் செய்கிறார். ஸ்கந்தர் என்ற முருகனுடைய பெயரை சிக்கந்தருடன் தொடர்புபடுத்தும் அவரை என்ன சொல்லுவது. எல்லாம் அந்த ஸ்கந்தனுக்கே வெளிச்சம்.


Devarajan Srinivasan
ஆக 23, 2025 04:58

யார் அந்த சிக்கந்தர்,அவன் மதுரை மக்களை வதைத்திருக்கிறான்..வெளியிலிருந்து நாட்டை சுரண்ட வந்தவர்..அவருக்கு இவ்வளவு போராட்டம்?இங்கும் மட்டுமே நடக்கும் கூத்து


Balachandran Rajamanickam
ஆக 22, 2025 09:58

யார் இந்த வாஞ்சிநாதன். ஓ அந்த வாஞ்சி சரி சரி..


முக்கிய வீடியோ