உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிரியின் முகம் மாறியுள்ளது: எண்ணம் மாறவில்லை: முதல்வர் ஸ்டாலின்

எதிரியின் முகம் மாறியுள்ளது: எண்ணம் மாறவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' நமது எதிரிகளின் முகம் மட்டும் தான் மாறி உள்ளது. அவர்களின் எண்ணமும், உள்ளமும் மாறவில்லை,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நீதிக் கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் திமுக ஆட்சி. இங்கு இருப்பவர்கள் அனைவரும் வாரிசுகள். வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பற்றி எரிகிறது. அவர்களுக்கு எரியட்டும் என்பதற்காகதான் திரும்ப சொல்கிறோம். திராவிடத்தை ஒழிப்போம் என சில கைகூலிகள் பேசுவது போன்று, பிடி ராஜன் ஆட்சியில் நீதி கட்சியை குழிதோண்டி புதைப்போம் என ஒரு தலைவர் சொன்னார்.மொழி போராட்டத்தின் போது, பிடி ராஜன் பேசும் போது, நாம் ஹிந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஹிந்தியை திணிப்பவர்களின் எதிரானவர்கள். அவர் அன்று சொன்னதை இன்றும் நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். டில்லியின் ஆதிக்க மனோபாவம் மாறவில்லை. நமது போராட்டமும் ஓயவில்லை. நமது எதிரியின் முகம் மாறி உள்ளது. அவர்களின் எண்ணமும் உள்ளமும் மாறவில்லை. அது மாறும் வரை நமது போராட்டம் ஓயாது தொடரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

naranam
ஏப் 23, 2025 04:22

தமிழர்களின் முதல் எதிரி விக் வைத்துக்கொண்டு முகம் மாறித்தான் இருக்கிறார்.


Kasimani Baskaran
ஏப் 23, 2025 04:04

திருப்தியில் இருக்கும் மந்திரிகள் ஓரிருவர்தான்.. ஜெயித்தது தீம்க்கா கூட்டணிதானே பின்னர் எப்படி நீதிக்கட்சி, தீக்கா எல்லாம் ஆட்சிக்கு வந்தது? தான் ஒரு இந்துக்களின் விரோதி என்று தெரியாமல் சொல்லி விட்டாரா முதல்வர்...


xyzabc
ஏப் 22, 2025 23:41

முதல்ல உள்ளூர் போராட்டங்களை கவனிங்க. தமிழகத்தில் இல்லாத பிரச்னைகளா ? உருட்டல்,திசை திருப்புவது ஓய போவது இல்ல.


Bhakt
ஏப் 22, 2025 23:01

நைனா பேசுறது பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு மாதிரி இருக்கு


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 22:06

நீதிக்கட்சி வெள்ளை எஜமானர்களால் உருவாக்கப்பட்டது. நாட்டு விடுதலையை எதிர்த்தது ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவரை கூட உயர் பதவிக்கு வரவிடவில்லை.


GMM
ஏப் 22, 2025 22:04

திமுக எதிரியின் முகாம் மாறியுள்ளது. அறிவாலயத்திற்கு தேர்தல், சட்ட அச்சத்தை உண்டுபண்ணுகிறது. நீதி கட்சி அறிந்த மக்கள் இல்லை. நிதி கட்சி மட்டும் அறிவர். ஸ்டாலின் சொல்ல வருவது ஆட்சி, கட்சி நிலைமை மோசம் ? தங்கம் போல் காந்தியை எடை போட்டு கொடுத்தால், கூட்டணி ஊன்றுகோல் உதவும். ஆட்சி விளிம்பு நிலை அடைவது கடினம்.


theruvasagan
ஏப் 22, 2025 22:04

வாரிசு என்கிற சொல்லை கேட்டாலே சிலருக்கு பற்றி எரிகிறதாம். கட்சியிலேயே நிறைய பேர் வயிறெரிஞ்சு கொண்டுதான் இருக்காங்க. அந்த எரிச்சல் பெரிதாகி கொழுந்துவிட்டு எரியும். அதில் எல்லாம் சாம்பலாகிவிடும்.


R.MURALIKRISHNAN
ஏப் 22, 2025 21:55

ஆக உமக்கு உதறல் எடுத்து விட்டது. அதுதான் உண்மை


R.MURALIKRISHNAN
ஏப் 22, 2025 21:52

முதலில் உமது ஆட்சியின் அலங்கோலத்தை சரி செய்யவும். உலகிலேயே சர்வாதிகாரி என்று சொன்னதும் சிரிப்பு வருவது உம்மை பற்றி சொல்லும் போது தான். மிக மிக கேவலமான ஆட்சி உம்முடையது. கொள்ளையரும் திருடர்களும், கேவலமாக பேசுபவர்களும் தான் உமது கட்சியின் அமைச்சர்கள். பொட்டியெல்லாம் கட்டி ரெடியாக இரும். வரும் தேர்தலில் உமது கட்சிக்கு சங்கு ஊத போகிறார்கள் மக்கள்


S Srinivasan
ஏப் 22, 2025 21:35

போய்யா போ, எங்க போறியோ அங்க போ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை