உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!

சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்: சினிமாவில் வன்முறைகளை காட்டுவதை மாணவர்கள் உள்வாங்கிக்கொள்கின்றனர். சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும். சினிமா மோகத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை திருத்த முடியாது.சிவாஜி கணேசன் எப்பேர்ப்பட்ட நடிகர். அவர் அரசியலில் பெரிதாக வளர முடியவில்லை. நடிப்பை தான் மக்கள் பார்க்கின்றனரே தவிர, அரசியலுக்கு வந்தால் எடுபடாது. சினிமாவும் அரசியலும் எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் எடுபட்டது.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான். சினிமாவால் கிடைத்த புகழ் வெளிச்சத்தை அரசியலுக்கு பயன்படுத்தி, ஜெயித்தவர்கள் தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ஆரும் தான். மற்ற எந்த நடிகர்கள் துவங்கிய கட்சியும் பெருசா எடுபடலை. இதை நம்ம ஊர் நடிகர்கள் உணராமல் இருப்பது தான் ஏன் என்கிற டவுட் வருகிறது.''சினிமா செல்வாக்கு அரசியலில் எடுபடாது என்பதை நம்ம ஊர் நடிகர்கள் இன்னும் உணராமல் இருப்பது ஏன் என்கிற சந்தேகம் எழுகிறது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pmsamy
ஏப் 20, 2025 07:07

உனக்கும் புகழ் ஆசை வந்து விட்டதா அதுக்கு தான் பத்திரிகையில பேட்டி கொடுக்கிறியா நாசமா போச்சு


என்னத்த சொல்ல
ஏப் 19, 2025 17:29

பூஜையெல்லாம் மடத்தில் நல்லா நடக்குதா?


Rajarajan
ஏப் 19, 2025 15:16

சுவாமி, உங்களுக்கு அறிவுரை அல்லது கருத்து சொல்லும் அளவு நான் தகுதியுடையவன் இல்லை. அடியேன், மிக மிக சிறியவன். இருப்பினும், எனது தனிப்பட்ட அனுபவ கருத்தை கூறுகிறேன். அரசியல்வாதிகள், அவர்கள் தங்கள் வேலையே பார்க்கட்டும். நீங்கள் அருளாசி வழங்கும் ஆன்மீகத்தை தொடருங்கள். ஆன்மீகமும், அரசியலும் இரு வெவ்வேறு துருவங்கள். ஒட்டவே ஒட்டாது. தற்போது தி.மு.க. உறுப்பினர்கள் செய்யும், பேசும் அலம்பலை பார்த்துக்கொண்டு தானே உள்ளீர்கள். தயவுசெய்து, விலகி இருக்கவும். இல்லையேல், தங்கள் பதவிக்கு களங்கம் வந்து சேரும். அப்படி, ஒருவேளை பிடிவாதமாக கருத்து கூறுவீர்கள் எனில், தயவுசெய்து, தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மடத்தை விட்டு வெளியேறிவிட்டு, பின்னர் உங்கள் கருத்தை தாராளமாக கூறுங்கள்.


Oviya Vijay
ஏப் 19, 2025 13:44

ஆன்மீகத்தில் கிடைத்த புகழ் வெளிச்சமும் அரசியலுக்கு உதவாது... இதையும் புரிந்து கொள்ளுங்கள்... ஆன்மீகவாதிகள் அரசியல் பேசுவது சமூகத்துக்கு நல்லதல்ல... உங்கள் பெருமையை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்...


Kasimani Baskaran
ஏப் 19, 2025 15:27

ஆன்மீக வாதிகள் இந்திய நாட்டின் குடிமக்கள் கிடையாதா? ஏன் இந்த வன்மம். வாக்குரிமை இருக்கும் எவரும் அரசியல் பேசலாம்.


titanicjack
ஏப் 19, 2025 12:42

ஜக்கி அவர்கள் மீடியாவிலும் மக்களிடையும் குரையாப் புகழ் அடைந்து விட்டார். தாங்கள் எப்போதாவது ஏதாவது சொல்கிறீர்கள். அதுவும் யாருக்கும் எவ்வித குறிப்பிடத்தக்க பிரயோஜனமும் தருவதாக தெரியவில்லை.


ms muralidaran
ஏப் 19, 2025 12:24

எல்லோருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது


சங்கி
ஏப் 19, 2025 11:47

ஆன்மிகவாதிகள் அவர்கள் வேலையை மட்டும் பார்த்தால் நல்லது


Ramesh Sargam
ஏப் 19, 2025 12:46

அரசியல்வாதிகள் அவரவர் பணியை நேர்மையாக செய்தால், ஆன்மீக வாதிகள் இந்த அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆக, அரசியல்வாதிகள் தங்கள் பணியை நேர்மையாக செய்யட்டும்.


angbu ganesh
ஏப் 19, 2025 14:21

அரசியல் என்பது ஒரு தூயமான நம்மள நம்பி வோட்டு போட்ட மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு கடவுள் பணி மாதிரி, ஆனா இப்போ அது பணம் சம்பாரிக்கும் ஒரு 5 வருட அரசு வேலை வாய்ப்பு மாதிரி ஆயிடுச்சு எப்படிவேணா ஏமாத்தலாம் எப்படி வேனா சம்பாரிக்கலாம்னு ஆயிடுச்சு இதுக்கு ஒரு விடிவே இல்லையா விடியாத ஒரு ஆட்சி நடக்குது அதற்க்கு விடியல் ஆட்சின்னு கப்ஸா அடிச்சிட்டு அவரை பார்த்த முதல்வர் மாதிரி தெரியல ஏதோ டெய்லி ஷூட்டிங் போற மாட்சி வெளில வர்ற கார்ல வரார் அவருக்கு அரசு பணத்துல பாதுகாப்பு வேற ஏதோ இவர் தமிழ் நாட்டுக்கு நல்லது பண்றமாதிரியும் இவரை யாரோ ஏதாச்சும் பண்ணிடுவாங்கலோன்ன்ற மாதிரியும் சே இதுக்கு கடவுள் ஏதாகும் வழி காட்ட மாட்டாரா அண்ணாமலைகே வெளிச்சம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை