உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜ்யசபா தேர்தலில் இறுதியாகும் கூட்டணி!

ராஜ்யசபா தேர்தலில் இறுதியாகும் கூட்டணி!

சென்னை: வரும் ஜூலையில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலின்போது, 2026 சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., கூட்டணியும் இறுதியாகி விடும் என்கின்றனர் பா.ஜ., கட்சியினர்.கடந்த 25ம் தேதி, டில்லி சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கடந்த 2023 செப்டம்பர் 25ல், பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது. அதன்பின், தற்போதுதான் அமித் ஷாவை, தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வேலுமணி, சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பழனிசாமி சந்தித்துள்ளார்.தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைக்கவே அமித் ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வதாகவும், பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், கூட்டணி தொடர்பாகவே முக்கிய பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.இச்சூழலில், அமித் ஷாவின் அவசர அழைப்பில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று, டில்லி சென்றுள்ளார். ஜனவரி இறுதிக்குள் நடக்க வேண்டிய தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல் இன்னும் நடக்கவில்லை. 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தெளிவான பாதையை முடிவு செய்து விட்டு, தமிழக தலைவர் தேர்தல் நடத்த அமித் ஷா விரும்புவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் பழனிசாமியை தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அண்ணாமலை டில்லியில் முகாமிட்டுள்ளார்.இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளை தி.மு.க., ஒருங்கிணைத்து வருவதை, ஆபத்தின் அறிகுறியாகவே பா.ஜ., தலைமை பார்க்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் வென்று, தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தால், பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் பெரிய அணி திரட்டுவர். அது, 2029 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.எனவே, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை எப்படியாவது தோற்கடித்தே ஆக வேண்டும் அல்லது தி.மு.க., பெரும்பான்மை பெறுவதை தடுக்க வேண்டும். இதுதான், தமிழகத்துக்கான அமித் ஷாவின் அரசியல் திட்டம். அதற்காக, எதையும் செய்ய, அவர் தயாராக இருக்கிறார். அதனால், கட்சியில் எந்த மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம்.இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர்கள் எச்.ராஜா, வானதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன், அமித் ஷா தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று பொன்.ராதாகிருஷ்ணனும் அமித் ஷாவை சந்தித்துள்ளார். வலுவான கூட்டணி இல்லாமல், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது என்பதால், அதற்கான முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.வரும் ஜூலையில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலின்போது, வரும் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., கூட்டணியும் இறுதியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sathyanarayanan
மார் 28, 2025 14:58

பிஜேபியின் தலைமையில் கூட்டணி அமையுமானால் கிடைக்கும் வெற்றிக்கு பலன் கிடைக்கும் இல்லையென்றால் வெற்றி கிடைக்கும் பிரயோஜனம் இல்லாமல் போகும் ஏனென்றால் எடப்பாடியை நம்புவது தகுந்தது அல்ல


Gnana Subramani
மார் 28, 2025 14:08

விரைவில் ஜெயலலிதா ஊழல் குற்றவாளி அல்ல என்று அண்ணாமலை கூறுவார். அதிமுக பைலை எரித்து விடுவார்


KR india
மார் 28, 2025 12:07

அ.தி.மு.க வினரின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். மறைந்த அ.தி.மு.க தலைவர்களை திரு.அண்ணாமலை, ஊழல்வாதிகள் என்று விமர்ச்சித்தது தவறு. பொதுவாக கூட்டணியில் இருந்தால், கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பால பாடம் திரு.அண்ணாமலைக்கு தெரியவில்லை.


KR india
மார் 28, 2025 11:50

எடப்பாடி அவர்கள், அ.தி.மு.க கட்சியையும், இரட்டை இல்லை சின்னத்தையும், தன் வசப்படுத்துவதற்கு, பி.ஜே.பி தயவு, அன்று, அவருக்கு தேவைப்பட்டது எனவே, பி.ஜெ.பி உடன் கூட்டணி வைத்தார். இப்போதும் கூட திரு.எடப்பாடி அவர்கள் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முயல்வது, தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவில் இருக்கும், இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றத்தான் என்பதை "அரசியல் ஞானிகள்" அறிவார்கள் அ.தி.மு.க வின் மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய பேச்சுக்களை தயவுசெய்து மீண்டும் கேட்டுப்பாருங்கள். அ.தி.மு.க வின் அரசியல் கணக்கு என்ன என்பதை அறிவீர்கள் எனவே, இரட்டை இலை சின்னத்தை, எடப்பாடிக்கு தராமல், பன்னீர் செல்வம் அவர்களுக்கு சாதகமாக அவர் பெயரில் தர வேண்டும். திரு. எடப்பாடி அவர்களை போன்று திரு.பன்னீர்செல்வம் பி.ஜெ.பி-க்கு, துரோகம் செய்ய மாட்டார் என்று நம்பலாம் எப்போதும், அ.தி.மு.க வின் குடுமி, பா.ஜ.க கையில் இருந்தால் தான், அவர்கள் பா.ஜ.க கூட்டணிக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்


கிஜன்
மார் 28, 2025 10:22

அண்ணாமலையை கழட்டி விடுவார்கள் ...என இந்த செய்தி கூறினால் அது மிக தவறு.. கட்சிக்கு உழைத்தவர்களை உதாசீனப்படுத்துவது நல்லதல்ல. பெண்களுக்கு பாதிப்பு வந்தபோது .... அவர் தன்னைத்தானே சவுக்கால் அடித்தது... பல நெஞ்சங்களை இளகச்செய்தது .... அந்த நல்ல மனதை புண்படுத்த வேண்டாம் ....


VARUN
மார் 28, 2025 14:14

படித்தும் அறிவில்லாத மூடங்கள்தான் இதுபோல் செய்துகொள்ளும்


Amar Akbar Antony
மார் 28, 2025 09:49

ஒரு உண்மையென்னவென்றால் மத்தியில் எப்படி ப ஜ க வோ அதை போல் இங்கு தீய மு கவும் கூட்டணி பலத்துடன் இருக்கிறது. இதை முறிப்பதற்கு இபிஸ் தினகரன் ஒபிஸ் ப ம க தே மு தி க ஒன்றுபட்டு ப ஜா க சேர்ந்து மோதினால் அந்த கூட்டணியை வீழ்த்தலாம்.


Indian
மார் 28, 2025 09:10

பி ஜா பி யோ அதன் கூட்டணியோ ஒரு நாளும் தமிழ் நாட்டை ஆள முடியாது .


KavikumarRam
மார் 28, 2025 10:56

ஒண்ணுக்கு ஒன்னு சம்பந்தமே இல்லாத பதினஞ்சு கூட்டணி வைத்து மக்களை வஞ்சிக்கும் திமுக 2026ல் அழிந்தே தீரும். 2036 க்குள் கருணாநிதி குடும்பம் சிதறியே தீரும். தற்போது இருக்கும் சோனியாவின் குடும்பம் மாதிரி இந்த குடும்பமும் கலகலத்து சிதறும். எழுதி வைத்துக்கொள். பாஜகவின் அடி எல்லாம் ஆரவாரமாக இருக்காது. ஆனால் ஆழமாக, அழுத்தமாக, சத்தமாக அழக்கூட தெம்பில்லாம, நல்ல டைம் எடுத்து, ஆதாரங்களுடன் நச்சுன்னு நடு மண்டைல விழும். அதுவரைக்கும் நீங்க வீரன் வென்றுன்னு துள்ளிக்குதிச்சுக்கிட்டே இருக்கலாம்.


Mettai* Tamil
மார் 28, 2025 13:24

ரொம்ப நாளைக்கு இந்த 60 வருஷ ஊழல் உங்களுக்கு கை கொடுக்காது ..இந்த ஊழல் ,தேச பிரிவினைவாதம் ,இந்து மத எதிர்ப்பு ஒழிய கண்டிப்பாக தமிழ் நாட்டை பி ஜெ பி ஆள வேண்டும் ..


Indian
மார் 28, 2025 09:09

அடிமைகளுக்கு ஒரு நாளும் வெற்றி இல்லை ..


Mettai* Tamil
மார் 28, 2025 13:17

ஊழல் கொத்தடிமையே உங்க எண்ணம் ஈடேறாது ...


mindum vasantham
மார் 28, 2025 08:53

அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெற மக்கள் பாடு பட வேண்டும்


Indian
மார் 28, 2025 09:09

பெரும் தோல்வி தான் காத்திருக்கிறது


SIVA
மார் 28, 2025 08:42

2021 அதிமுக கூட்டணி + TTV மற்றும் ஒபிஸ் இணைத்தால் அந்த இரு நூறு இடங்களை வெல்லும் , காரணம் அரசு ஊழியர்கள் , வரி உயர்வு , மின்சார கட்டான உயர்வு , விலைவாசி , ஆர் எஸ் பி மாடல் மீடியாக்களின் ஜால்ரா , சட்ட ஒழுங்கு இவைதான் , இவர்களுடன் சீமான் இணைந்தால் 234 அதிமுக அணிக்கே அந்த அணி தான் சட்டசபையே ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை