வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென் மாவட்டங்கள் நெல்லை மற்றும் தூத்துகுடியில் இன்று வரையிலும் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை
சென்னை : வடகிழக்கு பருவமழை காலத்தில், முதல் 20 நாட்களில் இயல்பை விட, 6.1 செ.மீ., மழை அதிகம் பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 15ல் துவங்கியது. ஆனால், இந்திய வானிலை மையம் கடைப்பிடிக்கும் காலண்டர் முறையில், அக்., 1 முதல் பெய்யும் மழை அனைத்தும், வடகிழக்கு பருவமழையாகவே கணக்கிடப்படும். இந்த அடிப்படையில், அக்டோபர் 1 முதல் 20 வரை, தமிழகத்தில் இயல்பான மழை அளவு, 9.5 செ.மீ., தான். ஆனால், 65 சதவீதம் அதிகமாக, 15.6 செ.மீ., பெய்துள்ளது.துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நாகப்பட்டினம் மாவட்டங்களில், இயல்பை விட குறைவான மழையும், பிற மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழையும் பதிவாகியுள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது படிப்படியாக, நாளை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை மறுநாள் புயல் சின்னமாகவும் வலுவடைந்து, வங்கக்கடலில் வடமேற்கு திசையில், ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகரலாம். இதற்கிடையில், தமிழக வடமாவட்டங்களில் கடலோர பகுதிகளை ஒட்டி, மத்திய மேற்கு வங்கக்கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேநேரத்தில், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது, மேற்கு, வடமேற்கில் நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், இந்த இரு நிகழ்வுகளால், சென்னை மற்றும் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே நிலை அடுத்த ஏழு நாட்களுக்கு நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்கள் நெல்லை மற்றும் தூத்துகுடியில் இன்று வரையிலும் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை