உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!

சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த உரையை சபாநாயகர் வாசித்து வருகிறார். புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கவர்னர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார். ,இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vvrpm7e5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக, சட்டசபைக்கு வந்த கவர்னர் ரவிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கவர்னர் ரவியை சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார். 'கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார்.இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டசபையில் உரை நிகழ்த்த வந்த கவர்னர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 'யார் அந்த சார்?' என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்தனர். அவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். உரையை கவர்னர் புறக்கணித்ததைக் கண்டித்து காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த விவாகரத்தில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறுகையில், 'தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

பெரிய ராசு
ஜன 06, 2025 17:30

நல்ல முட்டுக்கொடுர ஓங்கோல் அடிமையே குருகெலும்பு அற்ற கொடூர சோற்றால் அடித்த பிண்டமே :- நான் சொல்லுலே கட்டுமரம் சொன்னது


Raman
ஜன 06, 2025 14:09

Good job Hon. Governor. Jai Hind.


T.sthivinayagam
ஜன 06, 2025 14:04

மாநில பாஜாகா இத்தனை நாள் நடத்திய போராட்டங்களை இது போன்ற செயல்கள் மாற்றிவிடும் .அரசியல் செய்ய மாநில தலைவர்கள் இருக்கிறார்கள்


pandit
ஜன 06, 2025 12:50

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கூட்டம் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று எழுதினால் யார் வாசிப்பார். 200 ஊபீஸ் முட்டு கொடுப்பார்கள்


Sudha
ஜன 06, 2025 12:22

This is totally wrong .


ஆரூர் ரங்
ஜன 06, 2025 12:06

1968 க்கு முன் சட்டசபை தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியதில்லை. ஊழல் ஆட்சி துவங்கியவுடன் அந்த வழக்கமும் துவக்கப்பட்டதா?


திகழ்ஓவியன்
ஜன 06, 2025 11:59

அம்மையார் ஜெ வாக இருந்திருந்தால் இந்த ரவியை கூப்பிட கூட மாட்டார். ஏனென்றால், அவர் முதுகெலும்புள்ளவர்


Kumar Kumzi
ஜன 06, 2025 13:27

தமிழில் எழுதி குடுத்த துண்டுசீட்டையே வாசிக்க தெரியாத ஓங்கோல் தெலுங்கன் விடியலுக்கு தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கு


Matt P
ஜன 07, 2025 01:55

ஜெயலலிதா முதுகெலும்புள்ளவர். சுடாலின்க்கு இல்லைங்கிறீங்களா?


hari
ஜன 07, 2025 06:06

அப்போ கட்டுமரம் முதுகு எலும்பு இல்லாதவரா திகழ்


திகழ்ஓவியன்
ஜன 06, 2025 11:58

தமிழ் நாட்டு ஆளுநரை திருப்பி அனுப்ப பேச்சு வார்த்தை மட்டும் போதாது அமைதியான அதிரடியான மக்கள் போராட்டமும் தேவை . இல்லையென்றால் இது தொடர்ந்துக்கொண்டும். விவாதம் நடந்துகொண்டும்தான் இருக்கும் .


திகழ்ஓவியன்
ஜன 06, 2025 11:57

சங்கிகள் எந்த காலத்திலும் திருந்தமாட்டார்கள் அவர்கள் சுபாவம் அப்படி ஆளுநர் போஸ்ட் என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது என்பது கூடதெரியாமல் ம் பிஜேபி கட்சிக்காரர் போல் ஆளுநர் செயல்படுவது வெட்கக்கேடானது இவர்கள் மீது பல புகார் இருந்தும் நீதி மன்றங்கள் கூட இவர்களை கண்டிப்பதில்லை அப்புறம் எப்படி திருந்துவார்கள் ?வாய்ப்பேயில்லை ஆளுநர் இல்லாமல் கூட்டத்தொடரை அரசு நடத்த வேண்டும்


Kumar Kumzi
ஜன 06, 2025 13:24

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு கேவலம் கெட்ட பரம்பரை கொத்தடிமைக்கு சங்கி என்ன தெரியும் கூமுட்ட


hari
ஜன 06, 2025 15:24

கனடாவின் கொத்தடிமை அலறல் சத்தம் இங்கே கேகுதே...ஜாலி....


Dharmavaan
ஜன 06, 2025 17:33

ஆளுநர் எப்படி நடக்க வேண்டும் என்று திருட்டு த்ரவிட கொத்தடிமைகள் பேச கூடாது உன் சுடலை கூட்டம் ஒழுங்காக நடக்கிறதா அரசியல் சாசனப்படி


திகழ்ஓவியன்
ஜன 06, 2025 11:51

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என பதாகை தூக்கி திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது அதிமுக. இதற்குப் போட்டியாக, 'யார் அந்த அண்ணன்?' என போஸ்டர்களை ஒட்டி அதிமுக-வை சீண்டி இருக்கிறது நெல்லை திமுக.


சமீபத்திய செய்தி