உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி 3வது வெள்ளியில் ஜொலித்த அம்மன் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஆடி 3வது வெள்ளியில் ஜொலித்த அம்மன் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சேலம், ஆடி, 3வது வெள்ளியை ஒட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை நடந்தது. பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு, குங்குமத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் போன்று காட்சி தந்தார். அஸ்தம்பட்டி மாரிய ம்மன், அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில்களில் தலா ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பட்டைக்கோவில் அருகே சின்ன மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர்; அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன், எலுமிச்சை பழ அலங்காரங்களில் அருள்பாலித்தனர். அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன், நெத்திமேடு காளியம்மன், தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி கோட்டை கரடு அருகே உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில், சந்தன காப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டினர். ரூ.8 லட்சம்தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.ஆத்துார், உடையார்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். விநாயகபுரத்தில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில், வெள்ளி கவசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.கஞ்சி கலய ஊர்வலம்ஆத்துார், கல்பகனுார் சுயம்பு மகமாயி மாரியம்மன் கோவிலில், சுவாமிக்கு முக்கிய வீதிகள் வழியே கஞ்சி கலயம் எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. பின் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். படையல் வைக்கப்பட்ட கூழ், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.திருவிளக்கு பூஜைஆத்துார், கோட்டை அகழிமேடு, சம்போடை வனப்பகுதி மதுரகாளியம்மன் கோவிலில், 21ம் ஆண்டு, தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. 550 பெண்கள், தீப விளக்கு ஏற்றி வழிபட்டனர். அவர்களுக்கு ஜாக்கெட், வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. மதுர காளியம்மன் முத்தங்கி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஓமலுார் கடை வீதியில் உள்ள பெரிய மாரியம்மன், மஞ்சள் பட்டுப்புடவையில் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், கூழ் படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலையில் சின்ன மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை