உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது: சொல்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர்

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது: சொல்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர்

தஞ்சாவூர்: துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் கூறினார்.தஞ்சாவூரில், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில்,கவர்னரின் செயல்பாட்டினால் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில், மூன்று உறுப்பினர்கள் தேர்வு குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்பட விடாமல் தடுப்பது தான் கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கை எடுக்கப்பட்டு துணைவேந்தர் நியமனம் செய்யபடும்.மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதல்வராக நமது முதல்வர் உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
ஜன 07, 2025 22:35

Minister Sir, if the ion committee become four members instead of three members , what will happen ? Will it destroy the ion process ? UGC who finance your universities , advises to include one of his nominee so that outsider could do justification without any bias doing ion . Why you are afraid of UGC representative while you beg money from them


என்றும் இந்தியன்
ஜன 02, 2025 16:00

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது என்று உயர் கலவித் துறை அமைச்சர் சுழியன் கூறினார். ஏன்???ஊழல் இல்லாமல் நானில்லை எனக்கொரு ஊழல் என்றும் எவ்விடத்திலும் இருக்கின்றது அது என்னை காக்கின்றது - இது தான் திருட்டு திராவிடத்தின் ஒரே Agenda


சம்பா
ஜன 02, 2025 12:20

... மேய்க்க கூட லாயக்கில்லாத


முக்கிய வீடியோ