உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனுஷ் மற்றும் நெட்பிலிக்ஸ் தரப்பில் காரசாரமான வாதம் நடந்தது. நெட்பிலிக்ஸ் வாதம்: காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரமுடியாது. ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், 3வது நபர் எடுத்தது. அப்படியே வழக்கு போட்டாலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. காஞ்சிபுரத்திலோ அல்லது மும்பையிலோ தான் வழக்கு போட முடியும். எனவே, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், இவ்வாறு வாதிட்டனர். தனுஷ் தரப்பு வாதம்: ஆவணப்படத்தில் உள்ள நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் தனது படப்பிடிப்பு தளத்தில் தான் எடுக்கப்பட்டது. படத்தின் அனைத்துக் காட்சிகளும் தனுஷூக்கு சொந்தமானவை. ஆடை, சிகை அலங்காரம் முதல் அனைத்தும் கம்பெனிக்கு சொந்தம் என தெரிந்தே பட ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டார். பட ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னையில் தான் அலுவலகம் இருந்தது. எனவே, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியும், என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

D.Ambujavalli
ஜன 23, 2025 06:08

பத்து கோடியா? அது அந்த நடிகை பத்து நிமிஷத்தில் சம்பாதிக்கும் பணம் தனுஷுக்கும் அது ஐந்து நிமிஷ வருமானம் ஒரு சாதாரண குடிமகன் வாழ்வாதாரமான சொத்தில் மோசடி ஆக்ரமிப்பு வழக்குப்போட்டால், வாய்தாவுக்கு நடந்தே காலம் போய்விடும் அந்த சாமானியனைப்பற்றி கோர்ட்டுக்கு என்ன கவலை? பிரபலங்களின் கௌரவப் பிரச்னைதான் முக்கியம்


Raj S
ஜன 22, 2025 23:00

இதுக்கு முன்னால பதியப்பட்ட இதே மாதிரி வழக்கு எத்தனை அதில் எத்தனை இன்னும் தீர்ப்பு வழங்காம இருக்குனு பாத்து, இந்த நீதிபதியை அந்த வழக்குகளை முதல்ல தீர்த்து வெக்கச்சொல்லி... அது வரைக்கும் சம்பளம் குடுக்க கூடாது... அப்போ தான் இந்த மாதிரி நீதிமன்றங்கள் உருப்படும்...


KRISHNAN R
ஜன 22, 2025 22:28

நஷ்ட ஈடு கேஸ் எப்பவும் மாவட்ட நீதி மன்றம் விசாரிக்கும்.எப்படி இந்த நீதி மன்றம் எடுத்து நடத்தியது....எல்லாம் மாயம் யுவர் ஆனர்


theruvasagan
ஜன 22, 2025 22:02

சாமானியர்கள் போடும் சிவில் வழக்குகளில் பத்து இருபது வருஷத்துக்கு இழுத்தடிக்கும் கோர்ட்டுகள் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காட்டும் தீவிரம் சுறுசுறுப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சாதாரண வழக்குகளில் காட்டாதது வேதனையான விஷயம். காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமம்.


sankaranarayanan
ஜன 22, 2025 20:48

மக்களுக்கு பயன்படாத உப்பு சப்பு இல்லாத இது போன்ற வழக்குகளை நீதிபதிகள் இது போன்ற வழக்கு தொடர்ந்து அடுத்த முக்கியமான வழக்குகளுக்கு தாமதம் தற்படுத்தியதால் இந்த வழக்கை தொடர்ந்தவருக்கு கடுமையான தண்டனையும் அபராததாமும் அளிக்க வேண்டும் இனிமேல் இதுபோன்று பைசாவுக்கு போகாத வழக்குகளை யாருமே போடுவதற்கு அனுமதி மறுக்க வேண்டும்.


Jagan (Proud Sangi)
ஜன 22, 2025 20:27

சாதாரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் இது போல் நீதி மன்றம் விரைந்து விசாரிக்குமா ?


aaruthirumalai
ஜன 22, 2025 20:16

மிக முக்கியமான செய்தி


Ramesh Sargam
ஜன 22, 2025 19:50

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை