உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,04) கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e1j61u22&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையொட்டி, தங்க கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர். கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார். வரும் டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 15:56

அண்ணாமலையானே ... எங்கள் அன்பில் நிறைந்தோனே .... பல வருடங்களாக இஸ்லாமியர்களும் கொடியேற்றம், சந்தனக்கூடு விழா என்றெல்லாம் ஹிந்து மதப் பழக்கங்களைப் பின்பற்றி வருகிறார்கள் .... இஸ்லாத்தில் ஹிந்து வழக்கங்கள் புகுந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டன .....


Ramesh Sargam
டிச 04, 2024 12:46

அண்ணாமலையானுக்கு அரோஹரா. உண்ணாமுலையம்மனுக்கு அரோஹரா.


vels
டிச 04, 2024 10:49

ஓம் நமசிவாய சிவாய நாம ஓம்


vels
டிச 04, 2024 10:47

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை