உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுத்தாளர் வட்டத்திலும் கலகத்தை மூட்டிய கரூர் துயர சம்பவம்

எழுத்தாளர் வட்டத்திலும் கலகத்தை மூட்டிய கரூர் துயர சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இரு பிரிவாக பிரிந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 'இதற்கு த.வெ.க.,வினரே காரணம்' என தி.மு.க., தரப்பும், 'காவல் துறையே காரணம்' என த.வெ.க., தரப்பும் குற்றஞ்சாட்டு கின்றன. இந்நிலையில், கடந்த 2ம் தேதி முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்.பி.,க்கள் ரவிகுமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் உள்ளிட்ட 200க்கும் அதிகமானோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், 'விஜய், கட்சியினரை சந்திக்க தேர்வு செய்த முறை, அரசியல் முதிர்ச்சி, பொது வாழ்க்கை, தனிமனித கண்ணியத்திற்கு உகந்ததல்ல. இதுவே பேரழிவுக்கு இட்டுச் சென்றது. அரசு மீது பழிசுமத்தி விட்டு தப்பிக்கும் உள்நோக்கம் தெரிகிறது. ' குற்றத்திலிருந்து தப்பிக்க, இதுவரை கொள்கை எதிரி என கூறி வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் விஜய் தயாராகி விட்டார். விஜய் உள்ளிட்ட அனைவரையும், சட்டத்தின் முன்நிறுத்த, தமிழக அரசு தயங்கக்கூடாது' என கூறப்பட்டிருந்தது. அதற்குப் பதிலடியாக, 'படைப்பாளர்கள் சங்கமம்' அமைப்பு சார்பில், எழுத்தாளர்கள் திராவிட மாயை சுப்பு, இசைக்கவி ரமணன், கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர் கனகசபாபதி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் லட்சுமி மணிவண்ணன், ரவி சுப்பிரமணியன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட 200க்கும் அதிகமானோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், 'தி.மு.க., அரசின் தவறுகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். தாங்களே ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை உருவாக்கும் தாதா மனப்பான்மையை ஏற்க முடியாது' என கூறப்பட்டது. இதனால், இரு தரப்பாக எழுத்தாளர்கள் பிரிந்து, சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, தன் இணையதள பக்கத்தில் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், 'கூட்டாக எழுத்தாளர்கள் அறிக்கை விடுவது, எழுத்தாளர் என்ற அடையாளத்திற்கு எதிரான செயல். அரசின் சலுகைகளுக்காக, கூட்டறிக்கைகளில் எழுத்தாளர்கள் கையெழுத்திடு கின்றனர். 'பா.ஜ.,வும் ஒரு எழுத்தாளர் அணியை திரட்டி இருக்கிறது. ஆனால், பா.ஜ.,வின் மனநிலை, அள்ளி கொடுப்பது அல்ல; கிள்ளி கொடுப்பது. முழு நேரமும் பா.ஜ.,வுக்கு குரல் கொடுத்து வரும் மாலன் முதல் அரவிந்தன் நீலகண்டன் வரையிலானவர்களுக்கு, பா.ஜ., எதையுமே கொடுக்கவில்லை' என, கடுமையாக விமர்சித்தார். இதற்கு எழுத்தாளர்கள் மாலன், அரவிந்தன் நீலகண்டன் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாலன் வெளியிட்ட பதிவில், 'நான் எந்த பலனையும் எதிர்பார்த்து, எவரையும் ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ இல்லை. பிரச்னைகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவிக்கிறேன். 'எனக்கு எழுத்து என்பது சமூகக் கடமை; அது வணிகமல்ல. எல்லாவற்றிலும் லாபம் பார்க்க விரும்பும் வணிகர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது' என, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்குள் மோதலை ஏற்படுத்திய கரூர் சம்பவம், எழுத்தாளர்கள் இடையிலும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Varadarajan Nagarajan
அக் 10, 2025 03:55

எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும் எந்த கட்சி அல்லது எந்த ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் மக்களின் குறைகள் மற்றும் சமூக பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அரசு துறைக்கும் அல்லது அரசுக்கும் உரிய கவனத்திற்கு கொண்டுசென்று தேவையான நடவடிக்கைகளை செய்வது அவர்களது தர்மம். தற்பொழுது கரூர் துயர சம்பவத்திற்கு அவர்கள் செய்திருப்பது உண்மையில் அதுதான் என்றால் இதற்க்கு முன்பு நடைபெற்ற பல துயர சம்பவங்களுக்கும் இதுபோல குரல் கொடுத்தார்களா? தொழிலாளர்கள், வழக்கறிங்கர்கள், மருத்துவர்கள் தொடங்கி அரசு அலுவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு அரசியல்கட்சியின் பின்னல் பிரிந்துகிடக்கின்றனர். பிறகு எங்கிருந்து நியாயம் மற்றும் நடுநிலை வரும். அரசின் நலத்திட்டங்கள் முதல் அரசு பணிகள்வரை எதிலுமே நடுநிலை இல்லை. இதில் அவதிப்படுவது திருவாளர் பொதுஜனம் மட்டுமே.


Ganapathy Subramanian
அக் 09, 2025 17:32

மாலன் அவர்களின் கருத்து நியாயமானது, வரவேற்கக்கூடியது. ஜெயமோகன் என்ற சிவப்பு சட்டை உண்டியல் ஏந்தும் எழுத்தாளரிடம் எழுத்தில் இருக்கின்ற நியாயம் தற்போது போட்ட பதிவில் இல்லை. பலனை எதிர்பார்க்காமல் இருக்கின்ற எழுத்தாளர் கூட்டம் எங்கிருக்கிறது என்று தற்போது நிதர்சனமாக தெரிந்துவிட்டது. அவர்களே உங்களுக்கு பலன் அல்லது சன்மானம் வேண்டுமென்றால் இங்கே வாருங்கள் என்று மறைமுகமாக அழைப்பு விடுப்பது நமக்கு நன்றாக தெரிகிறது. அந்த பக்கம் இருக்கின்ற அரசு பலன்களை பிச்சை எடுக்கும் கும்பலிடம் நாம் எப்போதும் நடுநிலையை நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அந்த துரு பிடித்த சந்துரு இருக்கும் இடம் எப்போதுமே தீயவரின் கூடாரமாக இருக்கிறதே, அதன் காரணம் என்ன?


ஆரூர் ரங்
அக் 09, 2025 11:16

வேண்டாத கட்சிகளின் கூட்டங்களுக்குள்ளே மாடு நாய் கழுதை போன்றவற்றை ஏவிவிட்டு கலைப்பது ஈர வெங்காய சீடர்கள் 60 ஆண்டுகளாக செய்வதுதான். இப்போ நவீன முறையாக தள்ளுமுள்ளு செய்வது, காலி ஆம்புலன்ஸ் அனுப்புவது சேர்ந்துள்ளன.


தலைவன்
அக் 09, 2025 15:14

ஆதாரம் ஆதாரம் ??? வழக்கம் போலவே கான்ஸ்பிரசி தியரி.


Madras Madra
அக் 09, 2025 10:51

திரையுலகம் போல எழுத்துலகமும் நாசமாகி பல மாமாங்கம் ஆகி விட்டது


வேணு
அக் 09, 2025 10:08

கரூர் நிகழ்வு ஒரு கரும்புள்ளி அரசியல் அசிங்கத்தின் ஒரு எல்லை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவைகளை தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. அதுவும் எந்த பாகுபாடும் இல்லாமல் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை மனதில் கொண்டு அனைவரும் இனைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் கூட்டம் கூடும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் மக்களும் இதை உணர்ந்து தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். உயிர் இழப்புக்கள் தவிர்க்க பட வேண்டும்..


சசிக்குமார் திருப்பூர்
அக் 09, 2025 08:10

திமுக ஆதரவு எழுத்தாளர் கும்பல் பெயர்களை பாருங்கள் எதுவுமே உண்மையான பெயர்கள் இல்லை. எல்லாம் மதமாறிகள்


raja
அக் 09, 2025 06:29

எல்லா ஊடகங்களையும் இந்த திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கூவால் புற குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்களால் வளைக்க முடியாது அதன் மூலம் பொய்களை மக்கள் மத்தியில் பரவ விட்டு ஓட்டுகளை அறுவடை செய்து கொள்ளை அடிக்கலாம் என்ற கனவில் மண்ணை அள்ளி போட்டு உள்ளார்கள் நேர்மையான பத்திரிக்கையாளர்கள்...


ராமகிருஷ்ணன்
அக் 09, 2025 06:23

எதிர்பாளர்கள் யார் என்று பார்த்து அல்லக்கைகள் மூலம் செமத்தியாக கவனிக்க திமுகவின் திராவிட மாடல் ரெடியாகுது


Palanisamy Sekar
அக் 09, 2025 06:12

இவர்கள் எந்த நாட்டில் இருப்பவர்கள்? அதிசயமாக இருக்கின்றதே. இவர்களின் வேலை என்ன? இதுவரை கேள்விப்படாத அமைப்பாகவும் ஆட்களாகவுமே தெரிகின்றார்கள். திமுக யாரையும் விடாது அறிக்கையும் பேட்டியையும் தொடர்ந்து தனக்கு ஆதரவாகவே கொடுக்க நிர்பந்தப்படுத்திய காரணத்தால்தான் இவர்களின் விலாசம் தற்போது தெரிகின்றது. எல்லாமே வேஸ்ட் லக்கேஜ்கள்..


சமீபத்திய செய்தி