உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை

மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை

திருச்சி:ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை அளித்த பேட்டி:தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக ம.தி.மு.க.,வும், வைகோவும் உள்ளனர். வைகோவை, 'பொய்க்கோ' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், கூறியது, அவரது கருத்து. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, கட்சி மற்றும் தலைமைக்கு எதிராக நடப்பது தெரிய வந்திருக்கிறது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, தலைமை முடிவெடுக்கும். தி.மு.க.,வில் இணைந்தவர்கள் எல்லாம், ம.தி.மு.க.,வில் இருந்து முன்பே விலகியவர்கள் தான். புதிதாக யாரும் சேர்க்கப்படவில்லை. கட்சியில் இருந்து கொண்டு பலர், தலைமைக்கு எதிராக துரோகம் செய்து வருகின்றனர். அவர்கள், வேறு கட்சிகளுக்கு செல்லலாம். ம.தி.மு.க.,வுக்கு 12 சீட் வேண்டும் என கேட்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pv, முத்தூர்
ஜூலை 12, 2025 10:30

அப்போ என்னதான்டா கேப்பீங்க?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 08:59

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக ம.தி.மு.க.,வும், வைகோவும் உள்ளனர்குடும்பமே மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை