உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமரை மலர்ந்தே தீரும்; மீண்டும் சொல்கிறார் தமிழிசை!

தாமரை மலர்ந்தே தீரும்; மீண்டும் சொல்கிறார் தமிழிசை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போரூர் ஈரநிலை பசுமை பூங்காவில், ஆய்வு செய்த பின், குளத்தில் தாமரைப் பூ இருந்ததை கண்டு, 'தாமரை வளரவே கூடாது' என, அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு நையாண்டியாக தெரிவித்தார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'தாமரை மலர்ந்தே தீரும்' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பதிவிட்டுள்ளார்.சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், போரூர் செட்டியார் அகரம் பகுதியில், 16.60 ஏக்கர் பரப்பளவில், 12.60 கோடி ரூபாய் மதிப்பில், ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதி, கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இப்பூங்கா பணியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு, ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம், இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தாமரைப் பூ இருந்ததை கண்டு, 'தாமரை வளரவே கூடாது' என, அதிகாரிகளிடம் நையாண்டியாக தெரிவித்தார்.மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வீட்டு வசதி துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ' தமிழக அமைச்சர் சேகர்பாபு சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவை ஆய்வு செய்தபோது குளத்தில் சில பூக்கள் பூத்திருப்பதைக் கண்டு, இயற்கையை ரசிக்காமல் பீதி அடைந்துள்ளார்.அவரது மனதில் அரசியல் உதித்துள்ளது. 'தாமரை இங்கு மலரக் கூடாது' என்று அதிகாரிகளிடம் கூறிய அவர் அகற்றுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. தமிழகத்தில் கனமழை பெய்யும். மழையால் குளங்கள் நிரம்பும். தாமரை அதிக அளவில் மலரும். குளங்களில் என்ன அரசியல்? இவ்வாறு தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு சமூக வலைதள பதிவில், தமிழிசை கூறியிருப்பதாவது: அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே... வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்... அரசுஅமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்... லட்சியப் பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

என்றும் இந்தியன்
நவ 07, 2024 17:08

ஏரியில் கூட தாமரை வளரவே கூடாது - அமைச்சர் ஷேக் பாபர் என்னும் சேகர்பாபு


Kadaparai Mani
நவ 07, 2024 16:43

திமுக அடாவடித்தனம் செய்தால் அதன் பலன் அதிமுகவிற்குத்தான் போகும் .


Rengaraj
நவ 07, 2024 16:00

தாமரை மலர வேண்டுமென்றால் ஒரு அண்ணாமலை பத்தாது. நூறு அண்ணாமலை வேண்டும். அந்த அளவுக்கு அறிவும் கடின உழைப்பும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையும் தேவை. மக்களை வெறும் மேடைபேச்சிலோ அல்லது பத்திரிகை அல்லது சமூக ஊடகங்களில் பேட்டியோ கொடுத்து மாற்றிவிடமுடியாது. களத்தில் இறங்கி போராடவேண்டும். மைக்ரோ மேனேஜ்மென்ட் என்ற ஒரு யுக்தியை தமிழகத்தில் கீழ்மட்ட அளவில் பாஜக இன்னும் ஆழமாக பயன்படுத்தவேண்டும். நமக்காக இவர்கள் போராடுகிறார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவர் வீட்டிலும் பாஜக இன்னும் ஆழமாக விதைக்கவேண்டும். அந்த மாதிரி ஒரு கட்டமைப்பை கொண்ட கட்சிகள் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்கின்றன.


Vijay D Ratnam
நவ 07, 2024 14:14

கமல் நடித்த வசூல் ராஜா படத்தில் ஒரு காட்சியில் நோயாளியாக வரும் ஒருவரின் வசனம். "நான் கூட ஹெல்த் மினிஸ்டர் ஆவோனும், ஹெல்த் மினிஸ்டர் ஆவோணும்னு இருந்தேன், இப்போ பரவாயில்லை கொஞ்சம் தேவலாம்" என்பார். தமிழிசை பேசுவது அது போல இருக்குது.


Ahamed Rafiq
நவ 07, 2024 13:58

நான் பிரம்மஞானி ராஜா வின் பேரன் 1970, 80 களில் தமிழ் திரை உலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என் தாத்தாவிடம் ஆசி பெற்று சென்றிருக்கிறார்கள்.என் தாத்தா வழியில் நான்.


Jay
நவ 07, 2024 13:17

பலகாலம் வளராமல் இருந்த பாஜகாவை அண்ணாமலை தற்போது வளர்த்து வருகிறார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற கவர்னரான பழைய தலைகள் மீண்டும் தங்கள் முகத்தை புதுப்பிக்க நினைக்க வேண்டாம். அவர்கள் நல்ல முயற்சி எடுத்தபவர்களாக இருந்தாலும் அவர்கள் முகம் தோல்வி முகங்கள் தான். அடைத்து நிற்காமல் அண்ணாமலைக்கு வழிவிடும்.


Rajasekar Jayaraman
நவ 07, 2024 13:07

பாஜக வுக்கு தேவையில்லா துருபிடித்த ஆணி தமிழிசை பேசாமல் இருந்தால் போதும் தாமரை மலரும்.


Karuthu kirukkan
நவ 07, 2024 12:53

பூவுன்னு இருந்த மலர தான் செய்யும் , வண்டுனா பூவை தேடி வரத்தானே செய்யும் ..எந்த வந்து வருதோ 2026


சாண்டில்யன்
நவ 09, 2024 00:52

பூவுன்னு இருந்தா மேலும் எங்கே மலருவது? வாடத்தான் செய்யுமே தவிர மலருவது எங்கே


V GOPALAN
நவ 07, 2024 11:25

மேடம் உங்களுக்கு என்று ஒரு சீட் பெறுவதற்கு முயற்சி எடுக்கவும் 15 வருடமாக உங்களுக்கு என்று ஓரூ சொந்த தொகுதியை தக்க வைக்க முடியவில்லை எனில் நீங்கள் எதற்கும் லாயக்கு இல்லை


சாண்டில்யன்
நவ 08, 2024 20:28

கொல்லைப்புற வாயில் ராஜ்ய சபா சீட் அவாளுக்கு மட்டும்தானா சாமானியருக்கெல்லாம் கிடைக்காதா


சாண்டில்யன்
நவ 09, 2024 00:38

ஆசிரியர் சாமானியமான ஆளில்லேப்பா சபாஷ்


Oviya Vijay
நவ 07, 2024 11:00

பக்கோடா பாய்ஸ்களுக்கும் கோபம் வருவது கண்கூடாக இங்கே தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை