உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!

நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூன் 15) 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இன்று (ஜூன் 14) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தென்காசி,* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* கன்னியாகுமரிஇன்று (ஜூன் 14) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருப்பூர்* திண்டுக்கல்* தேனிநாளை (ஜூன் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* கன்னியாகுமரிநாளை (ஜூன் 15) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தர்மபுரி* ஈரோடு* சேலம்* திருப்பூர்* திண்டுக்கல்* மதுரை* விருதுநகர்நாளை மறுநாள் (ஜூன் 16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* கன்னியாகுமரிநாளை மறுநாள் (ஜூன் 16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தர்மபுரி* ஈரோடு* சேலம்* நாமக்கல்* திருப்பூர்* திருச்சி* திண்டுக்கல்* மதுரை* விருதுநகர்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !