மேலும் செய்திகள்
'ஆக்டிவா இ' மின்சார ஸ்கூட்டர் ரூ.1.17 லட்சம்
22-Jan-2025
'ஹூண்டாய்' நிறுவனம், அதன் 'எக்ஸ்டர்' கார் அணிவகுப்பில், 'எஸ்.எக்ஸ்., டெக்' என்ற புதிய உயர்ந்த விலை மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால், எக்ஸ்டரின் உயர்ந்த விலை கார் என்பது 8.85 லட்சம் ரூபாயில் இருந்து 9.53 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த எஸ்.எக்ஸ்., டெக் மாடல், மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் கொண்ட பெட்ரோல் வகையிலும், மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட சி.என்.ஜி., வகையிலும் வந்துள்ளது. அம்சங்களை பொறுத்த வரை, கீ லெஸ் என்ட்ரி, முன்புற மற்றும் பின்புற டேஷ் கேம் வசதி, எட்டு அங்குல டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள் ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.இந்த காரின் விலை, 6 லட்சம் ரூபாய் முதல் 9.53 லட்சம் ரூபாயாக உள்ளது.டீலர்: Hyndai Motors Plaza99401 23242
22-Jan-2025