உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்கிறது

தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்கிறது

சென்னை: தமிழகத்தில் 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட உள்ளது.இது தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு வெளியிட்ட அறிவிப்புகள்: * 21 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.* அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்.* புதிய மாநகராட்சிகள் குறித்த அறிவிப்புகள் இனி வெளியாகும்.* தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.* நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139 ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும்.* சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.* சென்னையில் தற்போது 89 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஒரு வார்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.*தெருநாய்கள் பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கும்பணிகளை அரசு மேற்கொள்ளும்*கோவிட் காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.*தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதன் மூலம், அதன் எண்ணிக்கை குறைக்கப்படும்.*சென்னையில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ ரயில் திட்டப் பணிகளே காரணம்.* சென்னை போன்ற பெருநகரங்களில் மாடுகள் திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 22, 2024 20:19

திமுகவினர் நன்கு சம்பாதித்து சுருட்டி முழுங்க இப்படி பல திட்டங்களை கொண்டு வருவார்கள்.


Barakat Ali
ஜூன் 22, 2024 18:28

அதற்குத் தகுந்தவாறு உறுப்பினர்கள் அதிகமாவார்கள் ... மேயர்கள் அதிகமாவார்கள் ... அவர்களுக்குத் தொகுதி நிதி ... பலனோ பூச்சியம் .... மக்கள் வரிப்பணம் பாழ் ...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 22, 2024 15:29

தரம் உயர்த்துவது என்பதே வீட்டு வரி சொத்து வரி உயர்வு செய்யத்தான். பின்னர் மாநகராட்சிகளில் பாலங்கள் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு பாலங்கள் கட்ட டெண்டர் விட்டு காசு பார்ப்பார்கள். இது போல் டெண்டர் விடவே தரம் உயர்த்துவது. ஆக மக்கள் வரித்தொகை அதிகமாக கட்ட வேண்டும். நிலத்தின் மதிப்பு உயரும். நிலம் வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நன்றாக கல்லா கட்டலாம். தற்போது இந்த வெளிவந்தது கள்ளக்குறிச்சி சம்பவத்தை மறக்கடிக்கவே என தோன்றுகிறது. 40/40 நாளை நமதே மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.


vidiyal model
ஜூன் 22, 2024 15:18

சென்னை பூரா வெள்ளை காடு. metro ரயில் சென்னை முழுக்கவா நடக்குது?


vijay
ஜூன் 22, 2024 14:33

நான் ஏற்கனவே இங்கு சொல்லிருக்கேன். புதுசு புதுசா மாநகராட்சிகளும், நகராட்சிகளும் தரம் உயர்த்திட்டு, தரத்திற்கு தேவையான கட்டமைப்பு, மக்கள்தொகை, வரி வருமானம், பொருளாதாரம் ஏதும் இல்லாமல் செஞ்சால் நகராட்சி, மாநகராட்சி என்று சொல்லி வீட்டு வரி, வணிக வரி, சொத்து வரி என்று எல்லாத்தையும் உயர்த்திடுவாங்க அப்புறம் பாரு, எங்க திராவிட மாடல் ஆட்சியில் எல்லாமே உயர்ந்திருக்கு என்று பீலா உடுவாய்ங்க.


Kundalakesi
ஜூன் 22, 2024 15:45

நீங்க தான் தெளிவா யோசிக்கிறீங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை