பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்
சென்னை:தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 28 முதல் ஏப்., 15 வரை நடந்தன. இதில், 4,930 உயர்நிலை, 7,555 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 12,485 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.அதாவது, 4 லட்சத்து, 35,119 மாணவியரும், 4 லட்சத்து, 36,120 மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களில், 4 லட்சத்து, 78 மாணவர்கள், 4 லட்சத்து, 17,183 மாணவியர் என, 8 லட்சத்து, 17,261 பேர் தேர்ச்சி பெற்று, 93.80 சதவீதத்தை பதிவு செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 2.25 சதவீதம் அதிகம். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவியர், 4.14 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி அடைந்தவர்களில், ஆண்கள் பள்ளிகளை விட, பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகளை சேர்ந்தவர்களே அதிகம். அரசு பள்ளிகளை விட, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள்
தமிழகத்தில், 12,290 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதியதில், 11,409 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 237 சிறைவாசிகளில், 230 பேர் தேர்ச்சி பெற்றனர். 23,769 தனித்தேர்வர்களில், 9,616 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். கசக்கும் தமிழ்
பொதுவாக மொழிப்பாடங்களில், முழு மதிப்பெண் பெறுவது கடினம். இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில், 346 மாணவர்கள் ஆங்கில பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று உள்ள நிலையில், எட்டு மாணவர்கள் மட்டுமே, தமிழில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.இந்தாண்டு முதல், தமிழ் பாடத்தில் உள்ள அலகுகள் குறைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், தமிழில் பின்தங்குவது குறித்து, பள்ளிக் கல்வி துறை ஆராய வேண்டியது அவசியம். துணைத்தேர்வு
பத்தாம் வகுப்பு தேர்வில், 53,978 பேர் தேர்ச்சி பெறவில்லை; 15,652 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், வரும் ஜூலை 4ம் தேதி முதல் நடக்க உள்ள துணைத்தேர்வுகளை எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்று, இந்த கல்வியாண்டிலேயே பிளஸ் 1ல் சேரலாம். படித்த பள்ளி வாயிலாகவும், அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும், வரும், 22ம் தேதி முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு இன்போகிராபிக்ஸ் பகுதிக்கு@தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்8,71,239 மாணவியர்4,35,119மாணவர்கள்4,36,120தேர்ச்சி பெற்றவர்கள்மாணவியர்4,17,183மாணவர்கள்4,00,078மொத்தம்8,17,261தேர்ச்சி சதவீதம்மொத்தம் 93.80மாணவியர் 95.88மாணவர்கள் 91.74தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டுடன் ஒப்பீடு2023 - 24 91.552024 - 25 93.80முழு தேர்ச்சி100 சதவீத தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள் / 4,917100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் / 1,867பாடவாரியாக முழு தேர்ச்சிபாடம்/ மாணவர்களின் எண்ணிக்கை/ தேர்ச்சி சதவீதம்தமிழ் / 8 / 98.09ஆங்கிலம்/ 346 / 99.46கணிதம் / 1996 / 97.90சமூக அறிவியல் / 10,256 / 98.49தேர்ச்சி சதவீத அடிப்படையில் முதலிடம் பெற்ற 5 மாவட்டங்கள்மாவட்டம்/ தேர்ச்சி சதவீதம்சிவகங்கை / 98.31விருதுநகர் / 97.45துாத்துக்குடி / 96.76கன்னியாகுமரி / 96.66திருச்சி / 96.61---அரசு பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 5 மாவட்டங்கள்சிவகங்கை / 97.49விருதுநகர் / 95.57கன்னியாகுமரி / 95.47திருச்சி / 95.42துாத்துக்குடி / 95.40---மேலாண்மை வாரியாக தேர்ச்சிபள்ளிகள் / எண்ணிக்கை / 100 சதவீத தேர்ச்சி/ சதவீதம்அரசு பள்ளிகள்/ 6,247 /1,867உதவிபெறும் பள்ளிகள் / 1,808 /459தனியார் / 4,430 / 2,591மொத்தம்/ 12,485 / 4,917---அரசு துறை பள்ளிகள் வாரியான முழு தேர்ச்சிபள்ளிகள்/ எண்ணிக்கை/ 100 சதவீத பள்ளிகள்பள்ளிக்கல்வி / 5,627 / 1,666ஆதிதிராவிடர் நலப்பள்ளி/ 206 / 97மாநகராட்சி/ 139 / 27வனத்துறை / 3 / 0கள்ளர் சீர்திருத்தம்/ 60 / 22நகராட்சி / 132 / 16சமூகப் பாதுகாப்பு / 6 / 3சமூக நலம் / 7 / 4பழங்குடி நலம் / 67 / 32மொத்தம் / 6247 / 1867மாவட்ட வாரியாக 100 சதவீத தேர்ச்சிமாவட்டம்/ பள்ளி எண்ணிக்கை/ 100 சதவீதம்சிவகங்கை / 278 / 175விருதுநகர் / 349 / 179துாத்துக்குடி / 308 / 161கன்னியாகுமரி / 435 / 236திருச்சி / 445 / 210---மாவட்ட வாரியாக பின்தங்கியுள்ள மாவட்டங்கள்தரவரிசை/ மாவட்டம்/ பள்ளி எண்ணிக்கை/ 100 சதவீதம் 34 / திருவள்ளூர் / 225 / 2635 / செங்கல்பட்டு/ 146 / 1436 / கள்ளக்குறிச்சி / 146 / 1137 / சென்னை / 161 / 1738 /வேலுார் / 135 / 16பாலின ரீதியிலான பள்ளி அளவில் 5 இடங்களில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்மாவட்டம் /ஆண்/பெண்/இருபாலர்/மொத்தம்/கன்னியாகுரி /428 / 2345 / 18333 /21106திருநெல்வேலி /1,541/ 4,329 /15,346/ 21,216தென்காசி / 664 / 2487/ 14,238 /17,389துாத்துக்குடி / 1,701 /4,120 /14,943 /20,764ராமநாதபுரம் / 732/ 1,702 /12,619 /15,053பிளஸ் 1 தேர்ச்சி இன்போகிராபிக்ஸ் பகுதிக்கு
பிளஸ் 1 தேர்ச்சி இன்போகிராபிக்ஸ் பகுதிக்கு
மொத்த பங்கேற்புமாணவர்கள் 3,82,488மாணவியர் 4,24,610மொத்தம் 8,07,098தேர்ச்சி பெற்றோர்மாணவர்கள் 3,39,283மாணவியர் 4,03,949மொத்தம் 7,43,232தேர்ச்சி சதவீதம்மொத்தம் 92.09மாணவர்கள் 88.70மாணவியர் 95.13மாணவியர் கூடுதல் சதவீதம் 6.43கடந்தாண்டுடன் ஒப்பீடு 2023 - 24 2024 - 25பங்கேற்றோர் 8,11,172 8,07,098தேர்ச்சி பெற்றோர் 7,39,539 7,43,232சதவீதம் 91.17, 92.09முழுமதிப்பெண் பெற்ற பள்ளிகள்மொத்த பள்ளிகள் 2,042அரசு பள்ளிகள் 282தேர்ச்சி சதவீதம்அரசு பள்ளிகள் 87.34உதவிபெறும் பள்ளிகள் 93.09தனியார் சுயநிதி பள்ளிகள் 98.03பாலின அடிப்படை பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்இருபாலர் பள்ளி 92.40பெண்கள் பள்ளி 95.02ஆண்கள் பள்ளி 83.66ஆண்கள் பள்ளிகளைவிட பெண்கள் பள்ளி கூடுதல் 11.36முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம்அரியலுார் 97.76ஈரோடு 96.97விருதுநகர் 96.23கோவை 95.77துாத்துக்குடி 95.07அரசு பள்ளி அளவில் முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம்அரியலுார் 96.94ஈரோடு 95.37நாகப்பட்டினம் 93.07விருதுநகர் 92.07சிவகங்கை 91.97மேலாண்மை வாரியான பள்ளிகளின் 100 சதவீத தேர்ச்சிமேலாண்மை மொத்தம் 100 சதவீத தேர்ச்சிஅரசு பள்ளிகள் 3,168 282உதவிபெறும் பள்ளிகள் 1,218 220தனியார் பள்ளிகள் 3,172 1,540மொத்தம் 7,558 2,042பாடம்/மாணவர்கள்/சதவீதம்தமிழ் / 41ஆங்கிலம் / 39இயற்பியல் / 390வேதியியல் / 593உயிரியியல் / 91கணிதம் / 1,338தாவரவியல் / 4விலங்கியல் / 2கணினி அறிவியல் / 3,535வரலாறு / 35வணிகவியல் / 806கணக்குப்பதிவியல் / 111பொருளியல் / 254கணிதப் பயன்பாடுகள் / 761வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் / 117--------பாடவாரியாக தேர்ச்சிபாடப்பிரிவு/ சதவீதம்அறிவியல் பிரிவுகள் / 95.08வணிகவியல் பிரிவுகள் / 87.33கலைப்பிரிவுகள் / 77.94தொழில் பாடப்பிரிவுகள்/ 78.31
பிளஸ் 1 எழுதாத 11,025 பேர்
தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழத்தில், 11,025 மாணவர்கள் தேர்வெழுதாததால், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.