உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்; தர்மேந்திரா பிரதான் பேட்டி

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்; தர்மேந்திரா பிரதான் பேட்டி

மதுரை: ''புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.அவர் கூறியதாவது : நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப்பழமையானது. நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்று கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை சமூக ஏற்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chess Player
டிச 29, 2025 23:30

புதிய கல்வி கொள்கையை வரவேற்கிறோம். படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம். சினிமா நடிகர்கள் பின்னால் போவர்களுக்கு எதிர்க்க மட்டுமே தெரியும்


sankaranarayanan
டிச 29, 2025 23:03

இவர் கூறும் கூற்றுக்கு திராவிட மாடல் அரசின் முதல்வர் மவுனம் சாதிப்பது எதற்காக என்று தெரியவில்லையே தேர்தல் நெருங்குவது காரணமா அல்லது சமரசம் ஆகிவிட்டார்களா ஆண்டவா


Prabhu
டிச 29, 2025 22:41

Please do not spread the wrong information,


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 29, 2025 22:23

எப்பொழுது ஏற்றுக் கொண்டார்கள் ? இவர்கள் காதில் வந்து ரகசியமாகச் சொன்னார்களா ?


N Sasikumar Yadhav
டிச 29, 2025 23:58

கோபாலபுர கொத்தடிமை மூளைக்கு இதெல்லாம் எட்ட வாய்ப்பில்லை


சமீபத்திய செய்தி