உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை வளர்த்து உருவாக்கிய இடம் இளைஞர் அணி: சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

என்னை வளர்த்து உருவாக்கிய இடம் இளைஞர் அணி: சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

சேலம்: என்னை வளர்த்து உருவாக்கிய இடம் இளைஞர் அணி என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சேலத்தில் நடைபெற்ற தி.மு.க.,இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:திமுக தலைவராக தான் கடமையாற்றி வருவதற்கும்.முதல்வராக மக்கள் தொண்டாற்றி வருவதற்கும் அடித்தளமிட்டது இளைஞரணி தான். 1980-ம் ஆண்டு ஜூலை 20 ல்தான் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞர் அணி துவக்கப்பட்டது. என்னை வளர்த்து உருவாக்கிய இடம் இளைஞர் அணி. அண்ணாதுரையால் துவக்கிய தி.மு.க., 75 ஆண்டுகளை கடந்து விட்டது. யாராலும் தி.மு.கவை அழிக்க முடியாது.தெற்கில் விடியல் பிறந்தது போல் விரைவில் இந்தியா முழுதிலும் விடியல் பிறக்கும். மாநில அரசுகளிடம் ஆலோசிக்காமல் மத்தியஅரசு சட்டங்களை கொண்டு வருகிறது. வெள்ள நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி பல முறை கேட்டும் இதுவரை வரவில்லை. இது வரை ஒரு பைசா கூட பேரிடர் நிதி வரவில்லை.திருக்குறளை சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களவை தேர்தலுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் தான் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அடுத்த 3 மாத கால உழைப்பில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. கவர்னர்கள் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை நடத்த பா.ஜ, முயற்சிக்கிறது. ஆனால் பா.ஜ.,வுக்கு வேட்டுவைக்க கவர்னர்களே போதும். பா.ஜ.,வின் அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை போனவர் எடப்பாடிபழனிசாமி. அனைத்தையும் செய்துவிட்டு தற்போது கூட்டணி முறிந்து விட்டது என நாடகம் ஆடுகிறார் பழனிசாமி, இவ்வாறு முதல்வர் கூறினார். முன்னதாக காலையில் துவங்கிய தி.மு.க., இளைஞரணி மாநாட்டில்25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டை திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி கொடியேற்றி துவக்கி வைத்தார். திமுக இளைஞரணி துணை செயலாளர் எழிலரசன் மாநாட்டுப் பந்தலை திறந்து வைத்தார்.கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் , மாநில இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி , அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.மாநாட்டில் 25 தீர்மானங்களை இளைஞரணி செயலாளர் உதயநிதி முன்மொழிந்தார்.அதன்படி,* தமிழகத்தை முன்னேற்ற பாடுபடும் முதல்வருக்கு இளைஞரணி துணை நிற்கும்.* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தல்* முதல்வரே பல்கலை., வேந்தராக இருக்க வேண்டும்* கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும்.* தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.* அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பா.ஜ., கைப்பாவையாக்கி வருகிறது.* நீட் தேர்வு விலக்கில் உறுதி உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Galleryமாநாட்டில் உதயநிதி பேசியதாவது: உழைப்பின் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப் படுகின்றனர். டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தயார். இந்த தேர்வுக்கு எதிராக 85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு உள்ளன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. நம்மிடம் அதிக வரியை பெற்று, குறைந்தளவு நிதியை மத்திய அரசு வழங்குகிறது.புதிய கல்விக்கொள்கை எனக்கூறி 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருகின்றனர். அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வரப்போகிறது என கூறுகிறார்கள். மத்திய அரசின் உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக தொண்டனின் கைக்குழந்தை கூட பயப்படாது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் ‛ இண்டியா ' கூட்டணி வெற்றி பெற வேண்டும். திமுக.,வின் வெற்றியை தமது வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ