வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதுதான் திருட்டு திராவிட மாடல் அரசு..
விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கையால் எழுதிய ரசீது வழங்கி அபராதம் விதித்த காலம் மாறி விட்டது. தற்போது -சலான்கள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய முறை எப்படி செயல்படுகிறது என்பது இன்னும் பலருக்கும் தெரியாது. போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.புதிய முறையில், குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்காக சாலையில் ஆங்காங்கே கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர்.ஆன்லைன் அபராதம்
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை, கேமராக்கள் கண்காணிக்கும். இதில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண் கண்டறியப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதித்து, -சலான்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், பல மாவட்டங்களில் இதுபோன்று இல்லை. போலீசார் கையில் வைத்துள்ள கையடக்க இயந்திரத்தில், டூ-வீலரின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்து அவர்களது மொபைல் போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் தான் உள்ளன.பல வாகனங்களுக்கு ஏற்கனவே எடுத்து வைத்த புகைப்படங்களை அப்லோடு செய்தும், பல்வேறு வகையில் ஆன்லைன் அபராதங்களை கண்மூடித்தனமாக போக்குவரத்து போலீசார் விதிப்பது வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு வாகனத்தின் மீதும் குறைந்தபட்சம் 10 முதல் 100 சலான்கள் நிலுவையில் உள்ளன. சில நேரங்களில் வாகனங்களின் மதிப்பை விட அதிக தொகையை செலுத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.ஒரு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இவ்வளவு தொகை அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் போலீசார் முறையாக வாகன சோதனை செய்து அபராதம் விதிப்பதில்லை. அப்படி விதித்தால் இலக்கை எட்ட முடியாது. இதனால் ஆங்காங்கே நிற்கும் வாகனங்களை போட்டோ எடுத்து, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அந்த போட்டோவில் உள்ள வாகனங்களின் எண்களுக்கு குலுக்கல் முறையில் அபராதம் விதிப்பதை போல சலான் போடுவது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.அதிகாரிகளும் பாதிப்பு
இதில், சாதாரண மக்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், இன்னும் சொல்லப்போனால், பல போலீஸ் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது: என்னிடம், கார், டூ--வீலர் உள்ளது. இதில், கார் தகுதிச்சான்று முடிந்து, பல மாதங்களாக ஓட்டாமல் வீட்டின் முன் சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளேன். அதற்குசீட் 'பெல்ட்' போடவில்லை என்றும், சிக்னலை மீறியதாகவும் சலான் உள்ளது. ஹெல்மெட் போடாமல் நான் வண்டி ஓட்ட மாட்டேன்.ஆனால், என் டூ--வீலருக்கு ஹெல்மெட் சலான் உள்ளது. எனக்கு மட்டும், 8,000 ரூபாய்க்கு அபராதம் உள்ளது. கார் தகுதிச்சான்று புதுப்பிக்கச் சென்ற போது, இந்த தகவல் தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
அதுதான் திருட்டு திராவிட மாடல் அரசு..