உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாமானிய மக்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது?: என்கிறார் அண்ணாமலை!

சாமானிய மக்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது?: என்கிறார் அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Syed Hussain
மே 04, 2024 20:25

பிரஜ்ரேவண்ணாவை நினைக்கும்போது சமான்ய மக்களின் நினைப்பு வரவில்லையே


தமிழ்வேள்
மே 04, 2024 19:37

தமிழகத்தில் எந்த மூலையில் எந்த விதமான குற்றம் நிகழ்ந்தாலும் அதில் திமுகவின் தொடர்பு தலையீடு ஆதரவு தூண்டுதல் இன்றி நிகழ்ந்து இருக்கும் வாய்ப்பு ஏதும் கிடையாது


ரவி
மே 04, 2024 19:12

மழை.பெய்யலேன்னா யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஜீ கிட்டே சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லுங்க.


MADHAVAN
மே 04, 2024 18:17

கந்தஹார் விமான கடத்தல் மறந்துட்டியா


MADHAVAN
மே 04, 2024 17:21

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக காவல்துறை கைது செய்த கஞ்சா வியாபாரிகள் அனைவரும் பிஜேபி இந்த கட்சிகள் இருக்குறவங்க..


J.Isaac
மே 04, 2024 16:06

குஜராத் துறைமுகங்கள் வழியாக தான் போதைப்பொருட்கள் கொண்டு வரப் படுகின்றனவே


Kumaran
மே 04, 2024 15:43

திமுக அரசு பொறுப்பேர்க்கும் போதெல்லாம் தமிழகத்தில் அசாதாரண சூழலில் பாதகாப்பற்றதாக உள்ளது


Bala Paddy
மே 04, 2024 14:49

இந்த அரசுக்கு காலம் முடிந்து விட்டது பொம்மை முதல்வர் உதய நிதி அவல நிலையில போலீஸ் நேரம் வந்தாச்சு


RAAJ68
மே 04, 2024 14:34

EXPRESS TRAIN ல அபாய சங்கிலி வேலை செய்யாததால் காப்பினி பெண்ணின் உயிர் போயிற்றே அது பத்தி பேசுங்க.


Gopal,Sendurai
மே 04, 2024 14:53

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களினால் தமிழக மாணவர்கள் அதற்கு அடிமையாகி போகிறார்கள் விடியல் அரசிடம் அதை கேட்க முடியவில்ல அதை விட்டு ரயில்ல அபாயச் சங்கிலிய பத்தி பேச வந்துட்டார்


sridhar
மே 04, 2024 15:08

இது தான் ஒரு சராசரி


Palanisamy Sekar
மே 04, 2024 15:53

சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் இவ்ளோதான் போல


வீரத் தமிழன்
மே 04, 2024 14:15

சாமானிய மக்களின் பாதுகாப்பு நீங்கள் ஒருவேளை முதலமைச்சர் ஆனால் பாதுகாப்பு வரும் என எண்ணுகிறேன்.


ديفيد رافائيل
மே 04, 2024 15:18

அரசியல்வாதியானால் இப்படி தானே நிலைமை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை