உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவள்ளூரில் பெஞ்சல் புயலின் ருத்ரதாண்டவம்

திருவள்ளூரில் பெஞ்சல் புயலின் ருத்ரதாண்டவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்:'பெஞ்சல்' புயல் மழை காரணமாக, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் குளமாக தேங்கியுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புயல் காரணமாக மரங்கள் உடைந்து விழுந்தன.பொன்னேரிபொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாயுமான் செட்டி தெருவில் நேற்று, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீட்டு உபயோக பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருத்தணிதிருத்தணி ஒன்றியம், குமாரகுப்பம், தாடூர், செருக்கனுார் பங்களாமேடு, சிங்கராஜபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் பழங்குடியினர் குடியிருப்பு சுற்றியும் மழைநீர் சூழ்ந்தது. இதனால், 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.திருவாலங்காடுதிருவாலங்காடு ஒன்றியம், சின்னகளக்காட்டூரில் உள்ள மேட்டுத்தெருவில், மலர்விழி என்பவரது ஓட்டு வீட்டின் கூரையும், திருவாலங்காடு பெரிய தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது ஓட்டு வீட்டின் கூரையும் உடைந்து விழுந்தன.இதில், வீட்டில் வசிப்பவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பூண்டி நிலவரம்பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு, நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு 290 கன அடி, மழைநீர், 390 கன அடி என, மொத்தம், 680 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 0.557 டி.எம்.சி., நீர் உள்ளது.நீர்மட்டம், 35 அடி. தற்போது, 22.84 அடி. இங்குள்ள இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 100 கன அடி நீர் திறக்கப்பட்டு, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.பிச்சாட்டூர் ஏரிபிச்சாட்டூர் ஏரியில், நேற்று மதியம் 2:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 1,900 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில், 1.043 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 24.50 அடி.

பெங்களூரு விரைவு ரயில்

திருவள்ளூரில் நிறுத்தம்சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகில் கன மழையால், மழைநீர் குளம் போல் தண்டவாளத்தில் தேங்கி உள்ளது. இதையடுத்து, பெங்களூரு - சென்னை விரைவு ரயில் திருவள்ளூர் வரை நேற்று இயக்கப்பட்டது.மேலும், சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்கள் திருவள்ளூரில் இருந்து இயக்கப் பட்டன.

அறிவிப்பு

திருவள்ளூர்மாவட்டத்தில் மழை, வெள்ளம் சார்ந்த புகார் தெரிவிக்க, 044 - 2766 6746, 044 - 2766 4177 மற்றும் 94443 17862, 94989 01077 ஆகிய வாட்ஸாப் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 01, 2024 08:56

அரசை ஏன் குத்தம் சொல்றீங்க? வீட்டுக்கு வீடு இருந்த கிணறுகளை மூடி அதன்மேல் டாய்லெட் கட்டி வாடகைக்கு உடும் பேராசை பிடித்த தத்தி மக்களை சொல்லுங்க. திருவள்ளூர் கோவில் குளத்தில் வெல்லத்தைக் கரைச்சு மீன்களை சாகடிக்கும் தத்திகளை சொல்லுங்க. கண்ட இடத்தில் கண்டதை வாங்கி துண்ணுட்டு குப்பையை அங்கேயே போட்டு கையை சட்டையில் துடைத்துக் கொண்டு போகும் தத்திகளைச் சொல்லுங்க. இன்னும் ஸ்விக்கி, சொமாட்டொ மூலம் ஆர்டர் செஞ்சு குப்பையை தெருவில் வீசும் தத்திகளை சொல்லுங்க.


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 07:51

நீரை சேமியுங்க என்றால் கடலுக்கு அனுப்பும் அரசு, சிலை வைக்கத் தான் லாயக்கு ,கல்லணை கட்டிய கரிகால சோழன் இருந்திருந்தா இன்றைய ஆட்சியாளர்களை பார்த்து என்ன சொல்லியிருப்பார் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை