உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற விதி சிறுபான்மை கல்லுாரிகளுக்கு பொருந்தாது

தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற விதி சிறுபான்மை கல்லுாரிகளுக்கு பொருந்தாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கல்லுாரிகளில் முதல்வர், உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு, தேர்வு குழு அமைக்க வேண்டும் என்ற பல்கலை மானிய குழு விதிமுறைகள், சிறுபான்மை கல்லுாரிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் உள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பெண்கள் கிறிஸ்துவ கல்லுாரி, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி, லயோலா கல்லுாரி மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, விழுப்புரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கலை அறிவியல் கல்லுாரி ஆகியவற்றில், பல்கலை மானிய குழுவின் விதிகளுக்கு முரணாக, தேர்வு குழு அமைக்காமல், முதல்வர், உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கூறி, 66 உதவி பேராசிரியர்கள், ஒரு முதல்வர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை உத்தரவு பிறப்பித்தன.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி நிர்வாகங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:பேராசிரியர்கள், முதல்வர் நியமனங்களுக்கு ஒப்புதல் மறுத்து, இரு பல்கலைகளும் அளித்த காரணங்கள் ஏற்புடையதல்ல. 'பல்கலை மானிய குழு விதிமுறைகள்-- 2018' சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விதிமுறையையும் எதிர்த்து, வழக்கு தாக்கல் செய்ய அவசியமில்லை. எனவே, 66 உதவி பேராசிரியர்கள், ஒரு முதல்வர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, பல்கலைகள் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உதவி பேராசிரியர்கள், முதல்வர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்து, நான்கு வாரங்களில் சம்பந்தப்பட்ட பல்கலைகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

B MAADHAVAN
மார் 28, 2025 20:15

அரசு உதவி பெற்று, அரசு மானியங்களில் நல்ல சம்பளம் பெற தங்கள் சமுதாய மக்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். தங்கள் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து கல்லூரிகளில் இடம் கொடுத்து சேர்த்து கொள்வார்கள். இந்த அரசு பணம் பொதுவான வருவாயிலிருந்து கிடைக்கப் பெற்றது. சமுதாய வருவாய் விகிதத்தில் பிரிக்க முடியாதது அரசு உதவி பெறும் போது, அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை நிச்சயம் அமல்படுத்தியே ஆக வேண்டும். அது தான் சமூக நீதி. அதை முறையாக பின்பற்றாத கல்லூரி அமைப்பின் மீது நடவடிக்கை நிச்சயம் எடுக்கப் படவேண்டும். வாக்குக்காக ஆதரிப்பது ஜனநாயக விரோதச் செயல்.


அப்பாவி
மார் 28, 2025 10:06

சிறுபான்மைன்னு சொல்லிக்கிட்டு ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்துக்கிறாங்களே. அதைக் கட்டுப்படுத்துங்க. திருச்சியில் ஒரு கல்லூரி சின்னதா ஆரம்பிச்ச ஒரு சிறுபான்மை கல்லூரி இன்னிக்கி அந்தப் பகுதி மொத்தத்தையும் ஆக்கிரமிச்சு வளர்ந்துடுச்சு.


Ramesh
மார் 28, 2025 09:42

இப்போ பாருங்களேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் போகும். அங்க வழக்கம் போல சென்னை உயர்நீதிமன்றத்தை ரவுண்டு கட்டி அடிச்சி காரி துப்பி அனுப்பிட்டு ஒழுங்கா வேலையை பாருன்னு துரத்தி விடுவாங்க.


சண்முகம்
மார் 28, 2025 09:27

சிறுபான்மை கல்லூரிகளில் வேலை செய்ய படிப்பு கூட அவசியமில்லை.


vbs manian
மார் 28, 2025 08:54

நியமிக்கவே வேண்டாம். நியமித்ததாக வாய் வார்த்தை போதும். கல்லூரி கட்டுமானம் நூலகம் சோதனை சாலை வகுப்பறைகள் எதுவும் யாரும் கேட்கக்கூடாது. எல்லாம் பேப்பரில் இருக்கும். நிதி தாராளமாக பாயும்.


Arun, Chennai
மார் 28, 2025 07:21

Educational institutions have become fish market right from implementing Uniform syllabus in schools, granting autonomous to pvt colleges etc.... all happened Only during DMK regime...Education system has gone for a toss in TN, while rest of the states around TN have gone way ahead


GMM
மார் 28, 2025 06:36

தேர்வு குழு அமைக்க வேண்டும். மானிய குழு விதி சிறுபான்மை கல்லூரிக்கு பொருந்தாது என்றால், விதியை சேர்க்க நீதிமன்றம் கூற வேண்டும். பல்கலை உத்தரவை மன்றம் ரத்து செய்ய முடியாது. நிறுத்தி வைக்கலாம். மத சிறுபான்மையருக்கு என்று தனி கல்வி அந்தஸ்து, வேலைவாய்ப்பு கிடையாது. பல்கலை மானிய குழு தான் அனைத்து கல்லூரிகளுக்கும் நீதிமன்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை