உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்று பெய்ததும் இதே மழை... அதிருப்தியில் துாத்துக்குடி மக்கள்

அன்று பெய்ததும் இதே மழை... அதிருப்தியில் துாத்துக்குடி மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச., 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் மக்களின் இயல்வு நிலை பாதிக் கப்பட்டது; 52 பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.பாதிப்பில் இருந்து மக்கள் ஓரளவுக்கு மீண்டு வந்த நிலையில், ஓராண்டு நிறைவுபெறும் வேளையில் அதே போல மற்றொரு மழை பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர். எனினும், மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் அதிகம் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g7evxxwb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. அதேபோன்று தற்போதும் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பணியில் இருந்த ஊழியர்கள், பத்திரமாக மீட்கப்பட்டனர்.நெல்லை - - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மங்களகிரி விலக்கு பகுதியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.குறைந்த அளவு மழை பெய்தாலே பாதிப்பு ஏற்படும் நிலையில்தான் துாத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. கடந்த ஆண்டு இங்கு மழைநீர் புகுந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.இந்த ஆண்டும் நேற்று, மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகளும், அவர்களுக்கு உதவியாக வந்தவர்களும் அவதிடையந்தனர்.துாத்துக்குடி -- திருச்செந்துார் இடையே பிரதான இணைப்பு பாலமான முக்காணி உயர்மட்ட மேம்பாலம் கடந்த ஆண்டு மழையில் சேதமடைந்தது. இதுவரை சரி செய்யப்படாததால், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்திலேயே வாகன போக்குவரத்து நடந்தது.தற்போது, அந்த பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், திருச்செந்துார் செல்ல பல கி.மீ., தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

PARTHASARATHI J S
டிச 16, 2024 08:39

தூத்துக்குடி துஷ்டசக்தி மிகுந்த நகரம். கிருத்தவர்களின் மதமாற்றம், திமுகவிற்கு ஜால்ரா போன்ற செயல்களை மாற்றிக்கொண்டால் நல்லது. காப்பர் ஆலையை மூடிவிட்டீர்கள். எல்லாருக்கும் வேலை போச்சு. அரசு கொடுக்கும் பிச்சைக்காசுக்கு அடிதடி. எது நல்லது என்பதை அறியாத கூட்டம். ஒருசில நல்லவர்கள் மனம் குழுறுவது தெரிகிறது. தொடரும் அவலம். இயற்கை எத்தனை முறைதான் பாடம் எடுக்கும் ?


M Ramachandran
டிச 15, 2024 17:31

கவலை அடையாதீர்கள் மக்களெ. கவிதாயினி வந்து மத்திய அரசே மழை பெய்ய காரணம் விடியல் அரசல்ல ஒன்றிய அரசே காரணம் நம் குன்றிய அரசு காரணமல்ல என்று ஆறுதல் கூறுவார்.


krishna
டிச 15, 2024 13:01

FRUIT AKKA DELHI BUNGALOWIL MIKKA MAGIZCHI AAGA ULLAR.


ram
டிச 15, 2024 10:51

இதுலேருந்து என்ன ஒன்று நல்லா வெட்ட வெளிச்சமாக தெரிவது.. காலம் தான் மாறுது காட்சிகள் மாறுவதில்லை... இதை சரி செய்துவிட்டால் அரசியல் செய்யும் அர்ப்பங்களுக்கு வேலை இல்லை.. இதைத்தான் காலகாலமாக செய்து வருது அரசியல் கட்சிகள்... ஒவ்வொரு வருடமும் மழை வருது .. சேதாரம் ஆகுது.. நிவாரணம் என்ற பேரிலே மத்திய அரசிடம் நிதி வாங்குது மாநில அரசு(தமிழ்நாடு) ஆனால் சரிசெய்யப் படுவதில்லை... அப்போ அந்த நிதி எல்லாம் எங்கே போகுது.. அதுதான் அரசியல்.. மக்களே விழித்தெழுங்கள்.. மக்கள் விழித்துக் கொண்டால் தான் இதற்கு முடிவு கிடைக்கும்... இந்த நிதியெல்லாம் நம்ம மக்களோட பணம்...


Sridhar
டிச 15, 2024 10:23

Vote for 5000, quarter and biriyani and then cry


sridhar
டிச 15, 2024 10:07

தூத்துக்குடியில் இருக்கும்


N Sasikumar Yadhav
டிச 15, 2024 09:57

ஓட்டுப்போடும்போது இதையெல்லாம் யோசிக்காமல் ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு திருட்டு திராவிட கட்சிகளுக்கே ஓட்டுப்பிச்சை போடுங்க


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 08:21

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. தூத்துக்குடி யில் முக்கிய பொறுப்பில் குடும்பப் பெண் இருக்கிறார் அதனால மழையாம் பொய்யான ஒரு ஐ டி சொல்லுது.


sridhar
டிச 15, 2024 11:19

அவரே விழுந்து விழுந்து சிரிப்பார் .


ராமகிருஷ்ணன்
டிச 15, 2024 14:06

தங்கம்


hari
டிச 15, 2024 23:36

கருத்தே கண்றாவி.. இதுல திருக்குறள் வேற...கொடுமை


chinnamanibalan
டிச 15, 2024 08:17

காமராஜர் காலத்தில் கட்டிய முக்காணி பாலம், காலம் பல கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் திமுக ஆட்சியில் அதனருகே கட்டப்பட்ட உயர் மட்ட பாலமும், ஏரல் அருகில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலமும் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தில் பழுதாகி செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.


SRIDHAAR.R
டிச 15, 2024 06:55

காமராஜர் போட்ட பாலம் இன்னும் பயன்படுவதை பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை