உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்... உடைந்தது: தி.மு.க., ஏமாற்றியதாக விஜய் கோபம்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்... உடைந்தது: தி.மு.க., ஏமாற்றியதாக விஜய் கோபம்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை, தி.மு.க., உடைத்து விட்டது. 'அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை; மத்திய அரசுக்கு தான் உண்டு' என, மூன்றரை ஆண்டுகளுக்கு பின், டில்லியை கைகாட்டியுள்ளார் முதல்வர். இந்த விவகாரத்தில், தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றி விட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டித்திருக்கிறார்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., தலைவர்கள், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும்' என, ஊர்தோறும் பிரசாரம் செய்தனர்.ஆட்சிக்கு வந்த பிறகும், அந்த தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறி வந்தனர்.தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம், கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த விஷயத்தை மீண்டும் கிளறினார்.'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். மூன்றரை ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்?' என, கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது உண்மை தான். நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை; மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும்.'மத்தியில் 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், நீட் தேர்வை ரத்து செய்திருப்போம். எங்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுலும் ஏற்றுக் கொண்டிருந்தார். மத்தியில், இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்றார்.அதற்கு சட்டசபையிலேயே பதிலடி கொடுத்த பழனிசாமி, 'மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்த போது தான், நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இண்டி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை வகிக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ், நீட் தேர்வை எப்படி ரத்து செய்யும்?' என கேள்வி எழுப்பினார்.'நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் பேசியதன் வாயிலாக, மாணவர்களையும், பெற்றோரையும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:'இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே' என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன.தேர்தலின் போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும்; தேர்தலில் வெற்றி பெற்ற பின், மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. அவற்றில், மிக முக்கியமானது நீட் தேர்வு.கடந்த 2021 தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம்; நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும்' என்று பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.ஆனால் தற்போது, 'நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது; மாநில அரசால் ரத்து செய்ய முடியாது' என்று தெரிவித்திருப்பது, ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

சக்தி இருதய வான்கோழிப் பண்ணை.
ஜன 14, 2025 13:11

அம்மா இருந்த போது நீட்டை வலுவாய் எதிர்த்தார். அம்மா இறப்பிற்கு பின் பா.ஜ.க அடிமை எடப்பாடி ஆதரவால் நீட் தேர்வு மசோதா நிறைவேற்றப் பட்டது.


Ramar P P
ஜன 12, 2025 23:30

ஆடத்தெரியாதவளுக்கு தெருக்கோணலாம்.


HoneyBee
ஜன 12, 2025 21:58

கூ முட்ட நீ கூட உன் மாநாட்டில் இதை பற்றி பேசினியே. உனக்கு கூட இந்த பாடல் பொருந்தும் தானே. பொய் சொல்லி விட்டு ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தில் ஒருவன் தானே நீயும்


Karthik
ஜன 12, 2025 15:24

அப்படி என்றால், ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்தது எப்படி?? என்ற ஒரு கேள்வி எழுகிறதே???


பல்லவி
ஜன 12, 2025 13:48

தமிழ்நாட்டு மக்கள் பாத்திரம் அறிந்து பிச்சை போடும் பழக்கம் உள்ளவர்கள் என்பது நிதர்சனமான உண்மை


SRIRAM
ஜன 13, 2025 22:23

அப்போ மக்கள் போட்ட பிச்சை தான் திமுக அரசாங்கமா..,.. பொதுவாக அவங்க திமுக தானே பிச்ச போடுவாங்க.... RSB எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு


Sivasankaran Kannan
ஜன 12, 2025 10:57

விஜய் போல ஒரு முட்டா-ள் நம் தமிழ் மக்களை முட்டாளாக நினைப்பது கொடுமை.. நீட் மூலம் நிறைய அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவது இந்த முட்டா-ள் திராவிட கூட்டத்திற்கு தெரிந்தாலும், தனியார் கல்லூரி கொள்ளைக்காக இந்த முட்டா-ள் கூட்டம் நீட் ஐ எதிர்க்கும்.. இந்த சுயநல விஜய் - எல்லா முதல் மதிப்பெண் மாணவர்களுக்கும் விளம்பரத்திற்க்காக பரிசு கொடுத்து, நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைக்க கூட இல்லை.. அது எவ்வளவு கடின தேர்வு, அதில் முதலிடம் என்பது பெரிய சாதனை - அதனை பாராட்ட துப்பில்லாத இந்த சுயநல கிருமி நீட் பற்றி பேச தகுதி இல்லாத ஒருவர்.. இவரை நம்பி ஒரு ரசிகர் கூட்டம்.. நல்ல வேலை இந்த நடிகன் 2% முதல் 4% சதவிதம் வாக்கு வாங்கி இன்னொரு திராவிட குஞ்சாக காணாமல் போக பெரிய வாய்ப்பு.. தமிழ் நாடு தப்பித்தது..


nv
ஜன 12, 2025 09:58

இவனெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன பயன்? கூத்தாடிகளுக்கு கூத்து தான் தெரியும்


Shekar
ஜன 12, 2025 09:12

சரி தளபதி நீங்களும் நீட்டை ஒழிக்கணும்னு சொன்னீங்க, எப்படி ஒழிப்பேன்னு சொல்லலை. உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்.


தமிழ் நிலன்
ஜன 12, 2025 09:02

தொண்ணுறு சதவீதம் பேர் ஏழைகள். சோற்றுக் போராடுபவர்கள். உங்களை போல் ஒரு சதவீதம் பேர் அவர்களை அட்டை போல உறிஞ்சி வாழ்பவர்கள். நீட் தேர்வு அவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் முன்னேறி விட்டால் சினிமா, சாராயம், லாட்டரி ஆகியவற்றில் இருந்து விலகி விடுவார்கள். பிறகு உங்களை போன்றவர்கள் உறிஞ்சி எடுக்க முடியாது. அவர்களை எப்போதும் கை ஏந்து பவர்களாக வைத்து இருந்தால் தான் உங்கள் பிழைப்பு ஓடும். உங்கள் வியாபாரம் தான் உங்களுக்கு முக்கியம்


Barakat Ali
ஜன 12, 2025 08:36

நீட் ஐ பல ஆண்டுகளாக எதிர்க்கும் ஒரு கட்சித் தலைவர் நீட் கோச்சிங் செல்லும் மாணவியரை நீட் செகண்ட் இயர் படிக்கிறீங்களா என்று கேட்டது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது .... இது கூட தெரியாமல் எதிர்த்திருக்கிறார்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை