உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது:திருமாமளவன்

அ.தி.மு.க.,வுடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது:திருமாமளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உடைப்பது எங்கள் நோக்கம் அல்ல; நட்புணர்வுடன் தான் கருத்தை சொல்கிறேன்,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார். அவர் அளித்த பேட்டி: பீஹாரில், 50 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோல், தமிழகத்திலும் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த மோசமான நிகழ்வை, பார்லிமென்டில் விவாதிக்க கோரி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்வைக்கும் விமர்சனங்களை வரவேற்கிறோம். ஆனால், பா.ஜ., வழிகாட்டுதல்படி விமர்சிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. எங்களுக்கு பா.ஜ., தான் கொள்கை பகை; அ.தி.மு.க., அல்ல. பா.ஜ.,வால் பாதிக்கப்பட்ட அதன் கூட்டணி கட்சிகள் பலவற்றை கூற முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி, முதுகில் சவாரி செய்து, அந்தந்த மாநிலங்களில் பா.ஜ., காலுான்றி வருகிறது. அதே யுக்தியை தமிழகத்திலும் பா.ஜ., கையாளுகிறது. தி.மு.க.,வை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதை விட, அ.தி.மு.க.,வை பல வீனப்படுத்தி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ., நினைக்கிறது. அ.தி.மு.க., உடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது. அக்கட்சி பாழ்பட்டு விடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் தான் சுட்டிக்காட்டுகிறோம்; அ.தி.மு.க., மீதோ, பழனிசாமி மீ தோ காழ்ப்புணர்ச்சி இல்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உடைப்பதும் நோக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sundar R
ஜூலை 25, 2025 15:12

திருமாவளவனின் மதிப்பு எட்டணா 50 காசுகள். எடப்பாடியார் அவர்கள் தன் கையில் வைத்திருக்கும் பாஜகவின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். எட்டணா திருமாவளவன் எடப்பாடியாரிடம், "உங்களிடம் உள்ள ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாஜகவை தூர விட்டெறிந்தால், என் கையில் உள்ள எட்டணாவை நான் மனமுவந்து தருகிறேன்" என்கிறார். அதற்கு எடப்பாடியார் திருமாவளவனிடம், "நீ சொல்றது எனக்குப் புரிகிறது. ஆனால், என் கூட்டணிக்கு வா என்று நான் சொல்றது உனக்கு புரியலை. நீ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தால், என் கையில் ஒரு லட்சம் ரூபாயும், எட்டணாவும் இருக்கும். நம்முடைய ஒரே நோக்கம், "திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்க வேண்டும்".


S.L.Narasimman
ஜூலை 25, 2025 12:28

அப்படி தோழமை உணர்ச்சி இருந்தால் தீயசக்தி திமுகாவை ஒழிக்க எடப்பாடியாருடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கலாமே.


சின்னப்பா
ஜூலை 25, 2025 10:46

“தினம், தினம் திருமா” என்று அறிவிக்காமல் ஒரு செய்திப் பகுதி தினமும் வெளியாகிறதோ?


எவர்கிங்
ஜூலை 25, 2025 10:44

வேங்கைவயல் தண்ணிய தண்ணியகுடி


VENKATASUBRAMANIAN
ஜூலை 25, 2025 09:04

கவுண்டமணி ஜோக் நினைவிற்கு வருகிறது. சும்மா நடிக்காத


Rajarajan
ஜூலை 25, 2025 08:40

சரிதான் உங்க அறிவுரை. ஆடு நனையுதேன்னு ஓணான் அழுத கதை. உங்க கூட்டணி தலைமை தி.மு.க. கட்சி, தமிழகத்தில் காங்கிரெஸ்ஸை கபளீகரம் செஞ்சு தானே வளர்ந்தது. இப்போ உங்களையும் சேர்த்து முழுங்கிட்டாங்க. எவ்ளோ நாள் தான் இப்படி பச்சபுள்ளயா நடிப்பீங்க. போறபோக்க பாத்தா....


Kjp
ஜூலை 25, 2025 08:08

திருமா அவர்களே கொஞ்சம் தேவையில்லாமல் கருத்து போடாமல் இருப்பது தமிழக மக்களுக்கு நல்லது.எப்ப பாரு அதிமுக பாஜக பற்றிய தேவையில்லாத கருத்து போட்டு அறுக்க வேண்டாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 25, 2025 07:26

பிளாஸ்டிக் நாற்காலிக்கு பதில் மர நாற்காலி கிடைத்தாலே போதுமே.


Rajagiri Apparswamy
ஜூலை 25, 2025 07:22

திருமா பேசிய பிறகு 2024 தேர்தலில் பஜக கூட்டணியிலிருந்து விலகியது அஇஅதிமுக. அதன் பிறகும் தலித் விரோத மதுபானம் விற்று பெண்கள் தாலி அறுக்கும், கொலை கொள்ளைகள் அதிகமாக உள்ள திமுக ஆட்சியை திருமா ஆதரித்தது ஏன்?


RAJ
ஜூலை 25, 2025 04:58

அடிச்சான் பாரு ஜம்பு ...இன்னும் பேசுவான் ஒட்டுண்ணி ... நல்லா காத தூக்கி காமிங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை