உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரணாசியில் தவித்த வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

வாரணாசியில் தவித்த வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

சென்னை:வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை, விமானத்தில் அழைத்து வர, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்தது.உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பிப்.,16, 17, 18ம் தேதிகளில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், தென்னிந்திய அணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த ஆறு வீரர்கள், ஒரு மேலாளர் என, ஏழு பேர் பங்கேற்றனர். அவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணிக்கு, வாரணாசியில் இருந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வர முன்பதிவு செய்திருந்தனர்.தற்போது, மகா கும்பமேளா நடப்பதால், அந்த ரயிலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இதனால், அவர்களால் ரயிலில் ஏற முடியவில்லை. தங்களை அழைத்துச் செல்ல, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்டனர். இந்த தகவல் அறிந்ததும், அவர்களை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி, துணை முதல்வர் உதயநிதி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறியதாவது:வாரணாசியில், தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர், ரயிலில் ஏற முடியாமல் தவித்த தகவல் அறிந்ததும், அவர்களிடம் பேசி ஆறுதல் கூறினோம். நேற்று மதியம், 1:30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூருக்கும், இரவு, 7:30 மணிக்கு, பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
பிப் 21, 2025 20:57

போனதுதான் போனீங்க. புண்ணிய ஸ்னானம் செஞ்சிட்டு வந்தீங்களா? இன்னும் 144 வருஷத்துக்கு கிடைக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை