உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகன் தி.மு.க., ஆகிவிட்டது ம.தி.மு.க.,

மகன் தி.மு.க., ஆகிவிட்டது ம.தி.மு.க.,

சென்னை:ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா கூறியதாவது: உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க, சென் னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. ம.தி.மு.க., என்பது விலகி, 'மகன் தி.மு.க.,' என, சுருங்கிப் போனது துரதிரு ஷ்டம். துரோக பட்டத்தை சுமத்தி, ஒவ்வொரு காலகட்டத்திலும், கட்சியின் பொதுச்செயலர் வைகோ தொடர்ந்து வெளியேற்றி வந்தார். தன் மகன் துரையின் அரசியலுக்காக, என் மீது அபாண்டமான, தீராத துரோக பழி சுமத்தியதை, ம.தி.மு.க.,வினர் நம்பவில்லை. உட்கட்சி ஜனநாயக படுகொலைக்கு நீதி கேட்போம்; வாருங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 01, 2025 16:41

மதிமுக பிரிந்ததே மகன் திமுக எதிர்ப்பால்தானே. இன்று அதே பேரன் திமுக, நாலா கொள்ளுப்பேரன் திமுக என்று பரிணாம வளர்ச்சி அடைந்த பின் அங்கெ ஒரு அரைக்கால் சீட்டுக்காக ஒட்டிக்கொள்ளவில்லையா? இன்றைய அவமதிப்பே நாளைக்கு பெரும் பதவியாகவும் மாறலாம் அரசியலில் இதுக்குப்போயி அலட்டிக்கலாமா ?


SIVA
ஆக 01, 2025 09:04

மகன் திமுக என்கிற வாரிசு அரசியலை எங்களால் ஏற்க முடியாது , இதை கண்டித்து மகன் மருமகன் என்று சமூகநீதி அரசியலில் செயல்படும் தீமூகாவிற்கு செல்கின்றோம் ...


சமீபத்திய செய்தி